வெல்லம் வாங்கலையோ வெல்லம்… என்னது வெல்லத்தில் இத்தனை நன்மைகளா… அப்ப உடனடியா வாங்கிற வேண்டிய தான்…!
இந்தியாவில் அதிலும் தென்னிந்தியாவில் திருமணநிகழ்ச்சிகள்,புதுமனை புகு விழா போன்ற முக்கிய நாட்களில் விருந்தானது தட….புடலாக….. சமைத்திருப்பார்கள். அறுசுவை உணவை வருகை தரும் விருந்தினர்களுக்கு வழங்குவார்கள். இதில் கூட்டு, பொரியல், தீயல் என பல வகை கூட்டுகளும், பருப்பு, சாம்பார்,ரசம், என பல வகை குழம்புகள் வைத்தாலும் இறுதியில் சர்க்கரை பாயசம் கண்டிப்பாக இருக்கும். இந்த சர்க்கரை பாயசம் எதற்கு என்றால் சாப்பிட்ட உணவுகள், எளிதில் செரிமானம் செய்வதற்காக வைக்கப்படுகிறது. இந்த கட்டுரையில் நாம் காண இருப்பது வெல்லம் மற்றும் நெய்யினை உணவில் எடுத்துக்கொள்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம் ….
வெல்லம் உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-
உணவு உட்கொண்ட பின் செரிமானத்திற்கு நல்லது என்பதால் பழங்காலம் தொட்டே உணவுக்கு பிறகு வெல்லம் சாப்பிடுவது ஒரு பழக்கமாக இருந்திருக்கிறது.
வெல்லத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் இரும்பு சத்து உள்ளதால் எலும்புக்கு வலு சேர்க்கிறது.
வாதம், பித்தம் மற்றும் கபம் போன்றவை உடலில் சமச்சீர் தன்மையுடன் இருப்பதற்கு உதவி புரிகிறது.
வெல்லத்தில் நார் சத்து உள்ளதால் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைக்கிறது.
ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
வெல்லத்தில் பொட்டாசியம் இருப்பதால் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது.
இது சுவாச பிரச்சைகளான ஆஸ்துமா, நுரையீரல், உணவு குழாயில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்கிறது.
வெல்லம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
வெல்லம் இயற்கையான மூலக்கூறுகளை கொண்டுள்ளதால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
வெல்லத்தை நெய்யுடன் உட்கொள்வதால் குடல் இயக்கத்திற்கு நன்மை செய்யும்.
உடலில் வெப்பத்தின் அளவை அதிகரிப்பதுடன் குளிர்ச்சியில் இருந்து பாதுகாக்கிறது.
மூட்டு வலி உள்ளவர்கள் வெல்லம் உட்கொள்வதால் வெல்லத்தில் உள்ள பாஸ்பரஸ், மற்றும் கால்சியம் மூட்டுகளை பலப்படுத்துவத்துடன் வலி நிவாரணியாக செயற்படுகிறது.
ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதுடன் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
வெல்லம் கரும்பு பாகில் இருந்து தயாரிப்பதால் இது ஒரு இயற்கை டையூட்ரிக் இது சிறுநீரக பையின் வீக்கத்தை குறைப்பதோடு சிறுநீரின் சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
வெல்லத்தை நெய்யுடன் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:-
வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் சி உள்ளன. நெயில் வைட்டமின்கள் எ,ஈ மற்றும் வைட்டமின் டி ,கே உள்ளதால் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
உடலில் உள்ள நச்சுத்தன்மைகள் அகற்ற உதவுகிறது.
உடலின் ஹர்மோனை சமநிலையில் வைக்கிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இது தோல், தோல்,மற்றும் நகங்கள்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.