யாருமே செய்ய தயங்கும் இந்த செயலை……. இந்திய குடிமகனாக ஆற்றிய பொறுப்பான பணி….. வாயடைத்து போன வலைதளவாசிகள்…

அன்றாட வாழக்கையில் அவரரவரின் சூழலுக்கேற்ப ஓடி கொண்டிருக்கிறோம். நின்று நிதானித்து யோசிப்பதற்கு கூட நேரமில்லாமல் பணத்தின் பின்னாலும், இணையத்தின் பின்னாலும் செல்லும் இந்த காலகட்டத்தில் யாரேனும் அத்தி பூத்தார் போல விதி விலக்காக சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டு பணியாற்றுபவர்களும் இருக்கிறர்கள். இவர்களுக்கு அங்கீகாரமோ, பணமோ, பதவியோ தேவையில்லை. அவர்கள் அதை பொருட்டாக கூட பார்ப்பது இல்லை. அவர்கள் கண் முன்னால் நடக்கும் நிகழ்வுகளுக்கு உடனடியாக செயல்படுவது. அதற்கு அவர்கள் ரூம் போட்டு யோசிப்பதெல்லாம் கிடையாது.

சமுதாய பொறுப்புடன் இருக்கும் சாதாரண குடிமகன்கள் ஆகும். இவர்கள் நிஜ கதநாயர்களாக போற்ற பட வேண்டியவர்கள், ஆயிரத்தில் ஒருவராக இருக்கும் நபர்களை இணைய வாசிகள் கண்டு பிடித்து போற்றி வருவது இந்த குடிமகன்களுக்கு சிறந்த கவுரவமாகும்.

இந்த காணொலியில் மழையின் மூலம் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் செல்வதற்காக உள்ள மடையில் தெருவில் உள்ள குப்பை கூளங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்து தண்ணீர் வடிவதை தடுக்கிறது. அந்த வழியாக வந்த இந்திய குடிமகன் அந்த அடைப்பை எந்த வித உறைகளும் கால்களிலும், கைகளிலும் அணியாமல் வெறும் கையோடு அதை அகற்றி தண்ணீர் வடிவதற்கு பொறுப்போடு செயல் புரிந்தார்.இந்த காணொலி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இவரின் செயல் பிடித்திருந்தால் கமெண்டுகளில் தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.