மாடிக்கு போறதுக்கு எனக்கு எதுக்குடா படிக்கட்டு… எப்படி போறேன்னு மட்டும் பார்… வளைந்து நெளிந்து சென்ற பாம்பு…!

snake_in_madi_padi_nz

பாம்பென்றால் படையும் நடுங்கும்…..தைரியமான நபர்கள் எப்படி பட்ட சவால்களையும் எதிர் கொள்வார்கள் ஆனால் பாம்பை பார்த்தால் மனதிற்குள் கலக்கம் கொள்வார்கள், அப்படி ஒரு சாதுவான….. அதே நேரம் சீறும் குணம் கொண்டது பாம்பு. பாம்பில் நிறைய வகைகள் இருக்கின்றன. அவற்றில் வீரியம் மிக்க பாம்புகள் முதல் விஷம் குறைவான பாம்புகள் வரை உலகத்தில் இருக்கின்றன. உலகம் முழுவதும் 3,000 வகை பாம்புகள் இருக்கின்றன. அண்டார்டிகா, ஐஸ்லாந்த், ஐயர்லாந்த்,க்ரீன்லாண்ட்,மற்றும் நியூஸ்லேண்ட் போன்ற நாடுகளில் பாம்புகள் கிடையாது. 600 வகையான பாம்புகள் விஷம் உள்ள பாம்புகள், இதில் 200 வகையான பாம்புகள் மனிதர்களை கொல்லும் விஷயமுடைய பாம்புகள் ஆகும்.

இந்தியாவில் 300 வகையான பாம்புகள் இருக்கிறது, இவற்றில் 60 வகையான பாம்புகள் விஷம் அதிகம் உள்ள பாம்புகள் 40 வகையான பாம்புகள் கொஞ்சம் விஷம் குறைவான பாம்புகள், 180 வகையான பாம்புகள் விஷம் இல்லாத பாம்புகளாக அறியப்படுகிறது. கிங் கோப்ரா இந்தியாவில் காணப்படும் ஆபத்தான பாம்புகளில் ஒன்றாக அறியப்படுகிறது. மேலும் நாகப்பாம்பு, கிரெய்ட், ரஸ்ஸல்ஸ் வீரியன் போன்ற பாம்புகள் இந்தியாவில் காணப்படும் விஷம் அதிகம் உள்ள பாம்புகள். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20,000பேர் பாம்புக்கடியினால் இறக்கின்றனர்.

தமிழகத்தில் நல்ல பாம்பு, கட்டு வீரியன், கண்ணாடி வீரியன் , மற்றும் சுருட்டை வீரியன் போன்ற பாம்புகள் ஆபத்தானவையாகவும் உயிருக்கு கெடுதல் விளைவிக்கும் பாம்புகளாக அறியப்படுகிறது. பாம்பு பயத்தை அளித்தாலும் பாம்புகளை தெய்வமாக வணங்கும் கலாச்சாரம் இந்தியாவில் இருக்கிறது. இங்கு காணொலியில் ஒரு பாம்பு என்னக்கெல்லாம் மாடிப்படி ஏறுவதற்கு படிகள் தேவையில்லை இந்த கை பிடி சுவரே போதும் எப்படி போறேன்னு மட்டும் பார் என்பது போல் வளைந்து நெளிந்து செல்கிறது. அந்த காணொளியை இங்கே காணலாம்….

You may have missed