மழை காலங்களில் கொஞ்சம் அவதானம் தேவை… ரோட்டில் இருந்த மழைநீரை தெரித்து மாஸாக வந்த காருக்கு நடந்ததை பாருங்க..!

நாம் என்னதான் யாருடைய பிரச்சனைக்கும் போகாமல் சும்மா இருந்தாலும் நம்மல தேடி பிரச்சனை வரத்தான் செய்யும் என்பதற்கு இந்த காட்சியே போதுமானது.

ஒரு மகிழுந்தானது வேகமாக வருகிறது. சாலையில் மழையினால் தேங்கி கிடந்த தண்ணீரில் சென்று தண்ணீரை பாய்ச்சி அடித்துக்கொண்டு வேகமாக வருகிறது. வாகனத்தை திருப்ப முயலும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் உள்ள மரங்களில் மோதி கீழே விழுந்து விட்டது.

அந்த மரத்திற்கு அருகில் ஒரு மாடு நின்று கொண்டிருந்திருக்கிறது. அந்த மகிழுந்து தன்னை நோக்கி தான் வருகிறது என்று யூகித்த மாடானது பயந்து பின்னோகி செல்கிறது. சாலையில் செல்லும் மனிதர்களுக்கு மட்டும் விபத்து ஏற்படாது சாலையோரத்தில் நிற்கும் விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படத்தான் செய்கிறது. இந்த காணொளியானது வலையதள வாசிகளால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நான் செவனேன்னு தான்டா நின்னுகிட்டு இருக்கேன். .???? pic.twitter.com/1efVvcBtNF
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) August 29, 2022