மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதா இந்த வீட்டுலையா வாழ்ந்தாங்க..? இணையத்தில் பரவும் வீடியோ..!

விஜயலெக்ஷ்மி(சில்க் ஸ்மிதா), இவர் இந்தியாவிலுள்ள ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த ஏலூரு என்ற ஊரில் டிசம்பர் 2, 1960ல் பிறந்தவர். குடும்ப வறுமை காரணமாக சென்னையில் வேலை தேடி வந்தவர். முதலில் நடிகர், நடிகைகளுக்கு ஒப்பனை செய்யும் கலைஞராக இருந்துள்ளார்.

பின்னர் தமிழ் நடிகர் மற்றும் இயக்குனரான வினுச்சக்கரவர்த்தி, தனது வண்டிச் சக்கரம் என்ற படத்தில் சில்க் என்ற கதாப்பாத்திரத்தில் ஸ்மிதா என்ற ஒரு புனை பெயருடன் இவரை அறிமுகம் செய்தார். இதுவே இவருக்கு ஒரு தனி அடையாளமாக மாறியது. பிறகு பல முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய திரைத்துறையில் புகழுடன் திகழ்ந்தார்.

அன்றைய இளைஞர்களின் மனதுக்கு மிகவும் பிடித்தவராக இருந்தவர். திடீரென சென்னையில் உள்ள அவரது வீட்டில் 23 செப்டம்பர் 1996ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதா வறுமையான ஏழை குடும்பத்தை சார்ந்தவர். ஆந்திராவில் இவர் பிறந்து வளர்ந்த வீட்டின் புகைப்படமானது இணையத்தில் பரவி வருகிறது.