மணப்பெண்ணின் செயலால் ஆச்சரியத்தில் ஆழ்ந்த இணையதளம்….

marriage_ponu_happy

தம்பதிகளுக்கு மறக்க முடியாத நாள் என்றால் அது திருமணம் தான். அதுவும் இருவீட்டாரின் ஆசியில் நடைபெற்றால் கொண்டாட்டம் தான். அண்மையில் நடைபெறும் திருமணங்களில் அங்கு நடக்கும் ஏதாவது ஒரு விஷயம் வீடியோவாக வெளியாகி படு வைரலாகியும் விடுகிறது.

அதே வகையில் தற்போது ஒரு திருமணத்தில் நடந்த நிகழ்ச்சி ஓன்று இணையத்தில் மாஸ்ஸாக வைரலாகி வருகிறது. மணப்பெண், மணமகன் தாலியை கட்ட போகும் போது சந்தோஷத்தில் கத்தி தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதனோடு விட்டு விடாமல் தன்னுடைய மணவாளனுக்கு கட்டி பிடித்து முத்தமும் கொடுத்துள்ளார்.

பொதுவாகவே பெண்கள் திருமணத்தின் போது அழுவார்கள். ஆனால் இந்த மணப்பெண்ணோ மிகவும் சந்தோசமாகவும் உற்சாகமாகவும் இருப்பது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த வீடியோ காட்சியானது அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

You may have missed