மஞ்ச காட்டு மைனாவாக 80ஸ் லுக்கில் மாறிய குஷ்பூ… தலையில் மஞ்சள் ரோஜா பூவுடன் எப்படி இருக்காங்க பாருங்க..!

1980 களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்படப் பயணத்தை தொடங்கியவர். 1990ல் முன்னணி நடிகையாகவும் வளம் வந்தவர். இவர் வருஷம் 16 என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெற்றி பெரும் படமாகவே அமைந்தது. இதனால் இவர் புகழின் உச்சத்திற்கே சென்றார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரது மூத்த மகள் நடிகையாக அறிமுகமாக உள்ளார். திருமணம் ஆன பிறகு சினிமா பக்கம் அவ்வளவாக வராத குஷ்பூ, சில நாடகங்களில் மட்டுமே நடித்து வந்தார். திடீரென உடல் எடை கூடி காணப்பட்ட குஷ்பூ, தனது உடல் எடையை குறைந்துக் கொண்டு இளம் நடிகை லுக் அளவுக்கு மாறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது உண்மைதானா என்று ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். அதிகமாக ஷேர் செய்து தங்கள் கமெண்ட்களை பதிவு செய்தும் வருகிறார்கள்.