பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்கிய மாரியம்மன் கோயிலில் திருவிழா.. தடையை தாண்டி தமிழன் எப்படி நடத்துகின்றான் பாருங்க..!

    தமிழகத்திலேயே இருப்பவர்களே தமிழில் பேசத் டயங்கும் காலம் வந்துவிட்டது. இப்படியான சூழலில் பாகிஸ்தானில் கடந்த தலைமுறையிலேயே செட்டிலாகிவிட்டவர்கள் அழகுத் தமிழில் பேசுகின்றனர். மாரியம்மன் கோயில் திருவிழாவையும் கனஜோராகக் கொண்டாடுகின்றனர் என்றால் ஆச்சர்யம் தானே?

    பாகிஸ்தானின் கராச்சிப் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு தான் அண்மையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்த கோயிலில் இருந்த அனுமன் சிலையும் சேதம் அடைந்தது. அந்நேரத்தில் இங்கு திருவிழா நடத்த முடிவு செய்து இருந்தனர். தீவிரவாதிகள் தாக்குதலால் திருவிழா தள்ளிப் போக பெரியவர்கள் முடிவு செய்தனர். ஆனால் பாகிஸ்தான் அரசு, திருவிழாவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது.

  அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம், பாகிஸ்தான் அரசு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட்டதோடு, கோயிலைச் சுற்றி சிசிடிவி கேமராக்களும் வைத்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க பாகிஸ்தானில் கராச்சி பகுதியில் மட்டும் 5 ஆயிரம் இந்து குடும்பங்கள் உள்ளன. அவர்கள் போஸ்டர் வாட்ஸ் அப் பதிவுகளின் வழியே இந்த கோயிலுக்கு வருகிறார்கள். மாரியம்மன் கோயில் செலவுகளுக்கு அனைவரும் நிதி பங்களிப்பு செய்கிறார்கள். நாங்கள் இந்துகள், தமிழ் பூர்வீக் குடிகள். அதேநேரத்தில் பாகிஸ்தானியர்கள் என புரிதலோடு சொல்கிறார்கள் இந்த மக்கள். பாகிஸ்தான் அரசும், இவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறது.

  இதோ பாகிஸ்தானில் நடக்கும் மாரியம்மன் கோயில் திருவிழாவை இந்தக் காணொலியில் பார்க்கலாம். 

You may have missed