நாட்டுப்புறப் பாடலுக்கு பாரம்பர்ய உடையில் செம ஆட்டம்… கல்லூரி மாணவிகளின் கலக்கல் நடனம்…!
முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி விழாக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அங்கு ஆட்டம், பாட்டத்துக்கு குறையே இருக்காது.
இளம்பெண்களின் நடனமாடும் ஆசையின் தொட்டக்கப்புள்ளியாக ஷெரிலை சொல்லலாம். ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு கேரளத்தின் ஷெரில் ஆடிய நடனம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து பலரும் அதேபோல் ஆடத் தொடங்கினர். அவற்றில் சில வைரலும் ஆனது. கல்லூரி விழாக்களிலும் மாணவிகள் மேடை ஏறி பட்டையை கிளப்புகின்றனர்.
இங்கும் அப்படித்தான் ஒரு கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. இதில் பாரம்பர்யமான சேலை கட்டி, கல்லூரிமாணவிகள் கல்லூரி மேடையில் செம ஆட்டம் போட்டனர். அதிலும், கொலுசுகடை ஓரத்திலே என்ற பிரபல நாட்டுப்புறப் பாடலுக்கு இவர்கள் செம ஆட்டம் போட்டனர். இதோ நீங்களே இந்த அழகிய நடனத்தைப் பாருங்களேன். வைரலாகும் காட்சி இதோ!…