நடுரோட்டில் ஜாலியாக பைக் ஒட்டி சென்ற குரங்கு… எப்படி வளைஞ்சு நெளிஞ்சு போகுது பாருங்க..!

என் உசிரோட விளையாடுறதே விளையாட்டா போச்சுல…..அடேய்…..விட்டிருடா என்னய…..நா பாட்டுக்கு சிவனேனு மரத்துல தாவிட்டிருபேன் என்னய போய் பைக்கில கட்டி இழுத்துட்டு போறியே உன்னக்கே நியாயமா படுதடா என அங்கலாய்க்கும் குரங்கு……

விலங்குகள் விலங்குகளாவே இருக்கின்றன. அது தான் அதனுடைய இயல்பு. மனிதர்கள் விலங்குகளை தனது விருப்பத்திற்கேற்ப பழக்கப்படுத்தி அவற்றை புது வித முயற்சிகளில் ஈடுபடுத்தி வித்தைகள் செய்ய வைக்கின்றனர். சில விலங்குகள் செய்யும் செயல்கள் வேடிக்கையாகவும், விநோதமாகவும், அதனுடைய குறும்புகள் ரசிக்கும் தன்மையில் இருக்கும்.

நாய்கள், பூனைகள், பறவைகள், குரங்குகள் மனிதர்கள் போன்றே சில பழக்கங்களை கடைபிடிக்கும். மனிதர்களிடம் கொஞ்சுவது, விளையாடுவது, கோபம் கொள்வது என சில உணர்வுகளை வெளிக்காட்டும். குரங்குகள் ஒரு படி மேலே போய் ஸ்மார்ட் போன்களை இயக்குவது வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்ற தற்கால தலைமுறைக்கேற்ப அவைகளும் மாற்றம் அடைந்து வருகின்றது.

இங்கு காணொலியில் இடம் பெற்றுள்ள குரங்கு என்னதான் அறிவில் மேம்பட்டு இருந்தாலும் மனிதர்கள் இயக்கும் ஊர்திகளை இயக்குவது கடினமான ஓன்று. ஒருவர் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பயணிக்க உடன் குரங்கையும் சிறிய இரு சக்கர வாகனத்தில் சங்கிலியால் இணைத்து பயணிக்க வைத்திருக்கிறார். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் குரங்கின் மன குமுறல்கள் அதன் பயணத்தில் தெரிகிறது. வேண்டாம் … வேண்டாம் சொன்ன யாரு கேக்குற….. நல்லா மரத்துல தொங்கிட்டு இருக்க என்னய போய் பைக் ஓட்ட சொன்னா என்ன பண்றது…. என் உசிரோட விளையாடுறதே இவனுக்கு பொழப்பா போச்சு என தெரிவிப்பதாக உள்ளது என சமூக வலைதளவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

You may have missed