நடிப்பில் நடிகர் சிவாஜியையே மிஞ்சிடும் போலயே இந்த சிறுமி… என்ன அழகாக நடிக்குது பாருங்க இந்த சுட்டி குழந்தை..!

இந்த தலைமுறையில் உள்ள குழந்தைகள் அனைவரும் மிகவும் சாமர்த்தியசாலிகளாகவே வளர்கிறார்கள். சிறிய குழந்தைகள் இருக்கும் இடத்தில் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது. இந்த காலக் குழந்தைகள் அதிகமாக சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவழிப்பதால் அதில் பார்க்கும் கார்ட்டூன் கேரக்டர்களாகவே மாறியும் விடுகிறார்கள். அப்படி இவர்கள் செய்யும் செயலானது வீடியோ பதிவாக எடுத்து இணையதளத்தில் போட்டு வைரலாக்கி விடுகிறார்கள்.

அந்த வகையில் ஒரு சின்ன குழந்தை செய்யும் குறும்புத்தனமான நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. வீட்டில் இருக்கும் ஒரு தண்ணீர் கேனின் வாயில் தன்னுடைய கையை விளையாட்டாக உள்ளே நுழைக்கிறது. பின்னர் வெளியே எடுக்க முடியாதது போல அழுது நடிக்கிறது.

அந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையின் கையை அந்த கேனில் இருந்து வெளியே எடுத்து விடுகிறார்கள். மீண்டும் அதே போல் செய்ததால் பெற்றோர்கள் அந்த கேனை எடுத்து அப்புறப்படுத்துகிறார்கள். இந்த குட்டி குழந்தையின் சுட்டி நடிப்பானது வைரலாகி வருகிறது.