நடிகை குஷ்புவின் அம்மாவா இது…? தற்போது எப்படி இருக்காங்க பாருங்க… அவரே வெளியிட்ட புகைப்படம்..!

தமிழ்த்திரையுலகில் தனக்கென மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் படையை கொண்ட நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் குஷ்பு. இவரது கணவர் சுந்தர்.சி பிரபலமான திரைப்பட இயக்குனர்.
தமிழ் நடிகைகளில் குஷ்பு ரசிகர்களின் இதயசிம்மாசனத்தில் அமர்ந்தவர். அதனால் அவருக்கு கோயிலே கட்டினார்கள் அவரது ரசிகர்கள். 1980களில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தைத் துவங்கிய குஷ்பு, 1990களில் முன்னணி நடிகையாக வலம்வந்தார். இவருக்கு அவந்திகா, அனந்திகா என இருமகள்கள் உள்ளனர்.

நடிகை குஷ்பு முதலில் திமுக கட்சியில் இருந்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சமீபத்தில் அங்கிருந்தும் வெளியேறி பாஜகவில் இணைந்தார். எப்போதும் சோசியல் மீடியாவிலும் நடிகை குஷ்பு செம ஆக்டீவாக இருப்பார். அடிக்கடி தன் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறார்.

குஷ்பு தற்போது சோசியல் மீடியாவில் தன் அம்மாவின் புகைப்படத்தை முதல் முதலில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கடவுள் நிஜமாகவே அனுப்பி வைக்கும் பரிசுதான் அம்மா. நான் சந்தித்ததிலேயே அழகான பெண் என் அம்மா. என் அம்மாவுக்கு இன்று 78 வது பிறந்தநாள் என தன் அம்மாவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் குஷ்புவின் அம்மாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்
pic 1

pic 2
