தாயைத் தேடும் குழந்தையின் தவிப்பைப் பாருங்க… இதுல யாரு எங்க அம்மா..? ரசனையான வீடீயோ பாருங்க..!


இரட்டையர்களைப் பொறுத்தவரை குணங்களில் மாறுபாடு இருந்தாலும் உருவ அமைப்பில் ஒரே போன்று இருப்பார்கள். பள்ளிக்காலத்தில் நம்மோடு இரட்டையர்கள் படித்தால் நமக்கே தெரியும். இருவரில் யார் ராமன்? யார் லெட்சுமணன்? என ரொம்பவே குழம்பிப் போய் இருப்போம்.

இரட்டையர்களில் பெரும்பாலானோருக்கு இந்த பெயரே வைக்கப்படுகிறது. பெரியவர்களுக்கே இதை கண்டுபிடிப்பதில் குழப்பம் இருக்கும்போது, குழந்தைகளின் நிலையை கேட்கவா வேண்டும்? இங்கே ஒரு குழந்தை இப்படித்தான் தன் தாய், அவரோடு பிறந்த இரட்டையரில் யார் தனது தாய் என்பதை தெரியாமல் குழம்பித் தவிக்கிறது.

ஒருவரின் மடியில் இருக்கும் குழந்தை எதிரில் இருப்பவரும் அதேபோல் இருக்க அழுதுகொண்டு அவரிடம் போகிறது. மீண்டும் அழுதுகொண்டு இப்போது எதிரிலே இருப்பவரிடம் போகிறது. இரட்டையர்களும் இதை ரசித்து விளையாட்டு காட்டுகிறார்கள். ரசனையான வீடீயோ பாருங்கள்.
வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.