தல அஜித்துடன் வீரம் படத்தில் வரும் குழந்தையா இது? இப்போ நச்சுன்னு ஹீரோயின் மாதிரி ஆகிட்டாங்க பாருங்க..

           தமிழ்த்திரையுலகில் தன் தேர்ந்த நடிப்பால் அதிகளவு ரசிகர்களைக் கொண்டவர் அஜித். தல அஜித்குமாருக்கு திரையுலகில் மட்டுமல்ல…வெளியிலும் மிகுந்த நல்ல பெயர் உண்டு. மிகச்சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து, இன்று திரையுலகில் உச்சநட்சத்திரமாக இருக்கிறார். 

    அஜித்குமார்,  தான் திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே தனது ரசிகர் மன்றங்களைக் களைத்தவர். நமக்குத் தொழில் நடிப்பு, ரசிகர்கள் தனக்காக தங்கள் பொன்னான நேரத்தையும், குடும்பத்தையும் மிஸ் செய்யக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்தார் அஜித். இதேபோல் அஜித்தை பார்க்க வேண்டுமென்றால் திரையில் மட்டும் தான் பார்க்க முடியும். தன் படம் சார்ந்த நிகழ்வு துவங்கி, எந்த பொதுநிகழ்விலும் கூட தல அஜித் தலை காட்டுவதில்லை. தல தரிசனத்திற்காக அவரது ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

  தல அஜித் தன் தம்பிகள் மேல் பாசம் வைத்திருக்கும் வீரம் திரைப்படம் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியானது. இந்தப்படமும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதில் அஜித்துடன் யுவினா என்னும் குட்டிப்பாப்பாவும் நடித்திருப்பார். இவர் இது மட்டும் இல்லாமல் விமல் நடித்த மஞ்சப்பை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் சீரியல் பக்கமும் ‘உறவுக்குக் கை கொடுப்போம்.”என்னும் சீரியல் மூலம் அறிமுகமானார். 

  குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்த யுவினா இப்போது நன்றாக வளர்ந்துவிட்டார். இப்போது அவர் ஹீரோயின் போல் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 

pic1

pic2