தலைக்கு எவ்ளவு தில்லு பாருங்க.. ஆர்ப்பரித்து வந்த வெள்ளத்தை நொடிப்பொழுதில் மாஸாக பைக்கில் கடந்த வாலிபர்!

         சாலையில் பாதுகாப்பான பயணத்துக்கு அரசு பலகட்ட ஆலோசனைகளை வழங்கிவருகிறது. ஆனாலும் அதற்கு பலரும் செவிமடுப்பது இல்லை. பாதுகாப்பான பயணத்துக்கு வாகன ஓட்டி மிகவும் சிறப்பானவராக அமைவதும் மிக அவசியம்.

   வாகனத்தை ஓட்டுவதற்குத் தகுதியான அளவுக்கு அவர் ஏற்கனவே தூங்கி ஓய்வெடுத்து இருக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் அதையெல்லாம் மீறி டிரைவர் பயண களைப்பில் இருப்பார். பேருந்தில் பயணிகள் தூங்கினால் அது வெறுமனே கடந்து போகக் கூடிய செய்திதான். அதுவே ஓட்டுனர் தூங்கிவிட்டால் அது மறுநாள் தலைப்பு செய்தியாகி விடும். சிலர் எப்போதுமே ரிஸ்கான பயணத்தை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள்.

  இங்கேயும் அப்படித்தான். மலைப்பாதை ஒன்றில் ஒருவர் பைக் ஓட்டிக் கொண்டிருந்தார். அங்கே நடுவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மித மிஞ்சி வரும் தண்ணீருக்கு மத்தியில் வாலிபர் ஒருவர் நொடிப்பொழுதில் சர்ரென தன் பைக்கில் ஆற்று வெள்ளத்தைக் கடக்கிறார். கரணம் தப்பினால் மரணம் என்பதைப்போல மிகவும் ரிஸ்கான பயணம் அது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.