தண்ணீரில் தத்தளித்த மான்… வீரத்துடன் செயல்பட்ட நன்றியுள்ள ஜீவன்..!
மனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கும் மட்டும் சொந்தமானது அல்ல விலங்குகளும் மனிதாபிமானதுடன் செயல்படும். சமீபத்தில் நாய் ஓன்று கண் தெரியாத நபருக்கு உதவி புரிந்தது சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. விலங்குகளும் மற்ற உயிரினங்களின் மேல் அன்பு மற்றும் அக்கறை கொள்ளும். நாயானது நன்றியுள்ள ஜீவன். நாயானது தன் வீட்டின் எஜமானருடன் மற்றும் இல்லாமல் அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அன்புடன் பழகும் குணம் கொண்டது. சில சமயங்களில் அறிவு பூர்வத்துடனும் செயல்பட்டு அவர்களை இன்னல்களில் இருந்து காப்பாற்றும். யாரேனும் அறிமுகம் இல்லாதவர் வீட்டிற்கு வந்து விட்டால் காது கிழிய குறைக்கும். இந்த விசுவாத்தை மற்ற விலங்குகளிட்ம் காண்பது அரிது.
நாய்களும் மற்ற உயிரினங்களும் மற்ற விலங்குகளின் குட்டிகளிடம் கருணையுடன் நடந்த கொள்ளும். சமூகவலைத்தளங்களில் இது போன்ற காணொலிகள் நிறைய காணக் கிடைக்கும் அதுமட்டும் அல்ல இது போன்ற காட்சிகள் வைரல் ஆவதும் உண்டு.
இங்கே தண்ணீரில் தத்தளித்த குட்டி மானை கருணையுள்ளம் கொண்ட நாய் ஓன்று அக்கரைக்கு நீந்தி சென்று அதனை மீட்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. உங்களுக்காக இந்த காணொலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
"@MikeHell7: A dog rescuing a Baby deer from drowning ♥️@Gidi_Traffic pic.twitter.com/dDuzdfVjml
— GIDI (@Gidi_Traffic) January 18, 2022