தங்கச்சிக்கு ஒன்னுனா உசுரையே கொடுப்போம்…. கீழே விழ இருந்த தங்கையை தன் புத்தி சாதுரியத்தால் செய்ததை பாருங்க..!

80-ஸ் , மற்றும் 90-ஸ் கிட்ஸ்களுக்கு பாசமலர் என்ற வார்த்தை அவர்களுக்கு பரிச்சயமான ஓன்று அப்போதெல்லாம் தூர்தர்சனில் ஞாற்று கிழமைகளில் மாலை 4-மணிக்கு திரைப்படம் ஒளிபரப்பப்படும். வாரம் ஒரு முறை ஒளிபரப்பப்படும் திரைப்படத்தை பார்பதற்காக ஞாயிறு தோறும் எதிர் பார்த்து கொண்டிருப்பார்கள். கிராமங்களில் ஒரு சில வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி இருக்கும். ஞாயிறு அன்று மட்டும் தொலைக்காட்சி இருக்கும் வீடுகளில் கூட்டம் களை கட்டும் .அந்த அளவிற்கு திரைப்படம் பார்ப்பதற்காக மக்கள் ஓன்று கூடுவார்கள். அப்போதெல்லாம் பெரும்பாலும் நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்புவார்கள். அதிலும் பாசமலர் திரைப்படத்தை பார்த்து அனைவரது கண்களிலும் கண்ணீர் வரும். ஏன்னென்றால் அண்ணன் தங்கையின் மீது வைத்திருக்கும் பாசத்தை அண்ணனாக நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் தங்கையாக நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களும் தத்ரூபமாக நடித்திருப்பார்கள். உண்மையான அண்ணன் தங்கை போன்று அந்த அன்பு வெளிப்படும்.

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு சிறுவர்கள் ஒன்றாக விளையாடும் போது தங்கைக்கோ அல்லது அண்ணனுக்கோ அடிபட்டு விட்டால் அண்ணன் தங்கைக்காகவும், தங்கை அண்ணனுக்காகவும், மற்றவர்களிட்ம் சண்டை பிடிப்பார்கள். கூட இருக்கும் சிறுவர்கள் விளையாட்டாக பெரிய பாசமலர் சிவாஜி, சாவித்திரி என்று நையாண்டி செய்வார்கள். அது அந்த காலமல்ல எந்த காலமாக இருந்தாலும் அண்ணன் தங்கை உறவு மாறுவதில்லை என்ற உண்மை இந்த காணொலியின் மூலம் புலப்படுகிறது.

அண்ணனான சிறுவன் ஒருவன் சோபாவில் விளையாடிகொண்டிருக்கும்போது அதே சமயம் அவனது தங்கையும் சோபாவை தாண்டி இறங்க முயற்சிக்கும் போது கீழே விழ உடனடியாக சிறுவன் அவளது துணியை பற்றி தங்கையை அடி படுவதிருந்து காப்பாற்றுகிறான். இந்த செயல் சிறுவனின் புத்திசாதுரியத்தை மட்டும் அல்லாது தங்கையின் மீது கொண்ட பாசமும் வெளிப்படுகிறது. இந்த அன்பு மலர்கள் தவழும் காணொலியை கண்டு களியுங்கள்.