சினிமா பாடலுக்கு பரதநாட்டிய நடனம்.. இப்படி கூட ஆடலாமா என ஆட்டத்தில் பட்டையைக் கிளப்பிய இளம்பெண்கள்..!
முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.
அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.
கனரக வாகனங்களைக் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அந்த வரிசையில் இப்போது சில பெண்கள், ஆண்களோடு சேர்ந்து நடனத்தில் பட்டையைக் கிளப்புகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டிணத்தில் நடக்கும் தசரா விழா ரொம்பவே விசேசமானது. இங்கு தசரா விழாக்காலங்களில் வேஷம் போடுவது மட்டும் அல்லாது, ஆட்டம், பாட்டம் என பட்டையைக் கிளப்பும். அந்தவகையில் இந்த தசரா விழாக்காலங்களில் நடக்கும் நடனமும் ரொம்ப பேமஸ்.
அந்தவரிசையில் தண்டவன்காடு என்னும் கிராமத்தில் ஸ்ரீ அம்மன் தசரா குழுவில் இருக்கும் அழகிய இளம்பெண்கள் கவிதை கேளுங்கள்..கருவில் பிறந்தது ராகம் என்னும் சினிமா பாடலுக்கு பரதநாட்டிய ஸ்டைலில் செம அழகாக நடனம் ஆடி அசத்தினர். சினிமா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடும் காட்சி பார்ப்போரை மிகவும் ரசிக்க வைக்கிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.