சாதாரண இயந்திர ஆப்ரேட்டராக இருந்து… பில்லியனர் ஆன டிக் டாக் பிரபலம்…….

காபி லம்பி இவரை உலகமே அறிந்த புகழ் வாய்ந்த டிக் டாக் பிரபலம் . தற்போது ஹாலி உட் ஆக்டர் ஸ்மித் உடன் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அப்படி அவர் என்ன செய்து பிரபலம் ஆனார் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

காபி லம்பி என்பது இவரது இயற்பெயர். ஆப்பிரிக்காவில் பிறந்த இவர் ஒரு வயதானபோது அவரது குடும்பத்தினர் இத்தாலிக்கு குடிபெயர்ந்தனர் . சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது கூடை பந்து விளையாட்டில் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பங்கு பெற்றுள்ளார்.

பள்ளி படிப்பை முடித்த பிறகு கல்லூரில் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு cnc நிறுவனத்தில் இயந்திர ஆப்ரேட்டராக பணிபுரிந்தார்.

கொரான காலத்தில் கம்பெனி மூடி விட வேலை வாய்ப்பை இழந்தார். இவர் கம்ப்யூட்டர் கேமிங்க் உருவாக்குவதில் ஆர்வம் இருந்ததால் சமூக ஊடகத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 22 வயதான காபி லம்பி சமூக ஊடங்களில் பதிவிடப்படும் சிக்கலான செய்முறை வேலைகளை வேடிக்கையாகவும், அதை எளிதில் செய்யும் வேலைகளாக உருவாக்கி வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார். இவ்வாறான வீடியோக்களில் அவர் மோனோ ஆக்ட் மட்டும் செய்தார். வார்த்தைகளால் விவரிக்காமல் செய்கையின் மூலமும், முக பாவனைகள் மூலம் மட்டுமே வெளிப்படுத்தினார். சமூக ஊடகத்துறையில் உலக அளவில் பிரபலமாகவும், அதிகமாக வருமானம் ஈட்டும் நபராகவும் உள்ளார்.

இத்தாலியில் சமூக ஊடகத்துறையில் டிக் டாக், யூ-டூப், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் வருமானம் ஈட்டுவதிலும், பாலோவர்கள் பின்பற்றுவதிலும் முதலிடத்தில் உள்ளார்.தற்போது 149 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்பற்றுகிறார்கள்.

You may have missed