கொழுப்பை குறைத்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இந்த பழம் கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..!


உணவே மருந்து என்பது பழமொழி. அந்த உணவு அளவாக இருந்தால் மிகப்பெரிய ஆரோகியத்தை நாம் அறுவடை செய்யலாம்.
சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவுகளே நம் ஆரோக்கியத்துக்கு கேடாய் அமைந்துவிடும். அது இல்லாமல் சிலவகை காய்கறிகள், பழங்களுக்கு நம் உடல் ஆரோக்கியத்தை மெயிண்டைன் செய்து நம்மை அழகாக்கும் சக்தியும் உண்டு. அப்படி ஒரு பழம் தான் ‘மங்குஸ்தான்’!

இது சாதாரண நேரங்களில் பழக்கடைகளிலோ, மார்க்கெட்களிலோ கிடைக்காது. அதேநேரம் குற்றாலத்தில் சீசன் நேரங்களில் மங்குஸ்தான் பழம் அதிக அளவில் கிடைக்கும்.இது வெளியே அடர்த்தியான ஊதா நிறத்திலும், உள்பகுதியில் வெண்மையான சதைப்பகுதியையும் கொண்டிருக்கும்.
இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடலில் இருக்கும் கொழுப்பை கணிசமாக குறைத்துவிடும். இதில் இருக்கும் சாந்தோன்கள் என்னும் பொருளே கொழுப்பைக் கரைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

இந்த பழம் புற்றுநோய் ஆராய்ச்சியிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதற்கு காரணம் இதில் இருக்கும் அழற்சி, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்தான்! இதை அடிக்கடி சாப்பிட்டால் உங்கள் தொப்பைக்கும் குட்பை சொல்லிவிடலாம்.