கூட்டமாய் வந்த எதிரிகளை ஒற்றை குரலால் தெறிக்கவிட்ட பூனை…… மனிதர்களுக்கே ஆசானாக மாறிய வினோதம்…

நாயை கண்டால் கல்லை காணோம்…… கல்லை கண்டால் நாயை காணோம்….. என்ற பழமொழி உண்டு. நாய் துரத்தும் போது கல்லை கொண்டு பயமுறுத்தினால் நாய் நம்மை கடிக்காது ஓடிவிடும். அப்படி நாய் துரத்தும் போது கல்லை தேடினாலும் கிடைக்காது துரத்தும் நாய்களிட்ம் இருந்து பாதுகாப்பதற்காக நம்மால் முடிந்த அளவு ஓடி விடுவோம். கல் அருகில் இருக்கும் போது நம்மை துரத்திய நாய் தென்படாது…… இது தான் அதன் பொருள்.

சமீபகாலமாக நாய்கள் மனிதர்களை தாக்குவது அதிகரித்து வருகிறது. கேரளா போன்ற பிற மாநிலங்களில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும், தனியாக தெருவில் சைக்கிளில் சென்றவரை நாய் ஓன்று துரத்தி கடித்தது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

தமிழ் நாட்டில் திருவண்ணாமலையில் ஆரணி அருகே வெறிநாய் ஓன்று 12 பேரை கடித்துள்ளது. வீட்டிற்குள் வந்து தூங்கி கொண்டிருந்தவர்களையும் தாக்கியது, ஒரு சிறுவன் உட்பட அதில் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி மனிதர்களையே பயமுறுத்தும் நாய்கள் ஒரு பூனையிடம் தோற்றுப்போனது.

கூட்டமாக 20-பதுக்கும் மேற்பட்ட நாய்கள் ஒரு பூனையிடம் பலத்தை காண்பித்து தோற்று போனது.

நாய்கள் பூனையை பார்த்து முறைத்தபடி குறைத்து கொண்டிருக்க பூனை அனைவரையும் ஒரு பொருட்டாக கருதாமல் பதிலுக்கு கத்தியது. இச்சம்பவம் மனிதர்களுக்கு பெரிய பாடத்தை புகட்டியுள்ளது. வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இடர் பாடுகள் வந்தாலும் சோர்ந்து போகாமல் எதிர்த்து நின்று போராட வேண்டும் . இதை பார்க்கும் அனைவரது கண்களும் ஆச்சர்யத்தில் புருவங்கள் உயரும். மேலும் மனிதர்களுக்கு ஆசானாக பூனை பாடம் புகட்டியுள்ளது. அந்த காணொலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது..