குடும்பத்தில் ஒருவராய் மாறிப்போன உள்ளங்கள்… இங்கு நடக்கும் செல்ல பிராணிகளின் குரும்பை பாருங்க..!

kudumpathil_oruvarai_mari_pona_ullangal

நாம் நம் குடும்ப உறுப்பினர்களிடம் பாசத்தோடும்,அக்கறையோடும் இருப்பது போல் நம் வீடுகளில் வளர்க்கும் விலங்குகளிடமும் நாம் அன்பை வெளிப்படுத்துவோம். இன்னும் சில வீடுகளில் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளை தங்கள் வீடுகளில் ஒருவர் போல் நடத்துவார்கள். அந்த காலம் முதல் இந்த காலம் வரை செல்ல பிராணிகளுக்கு ஒரு தனி இடம் ஒதுக்கி வீட்டில் உள்ளவர்கள் அக்கறையுடன் இருப்பார்கள் அது மட்டும் இல்லாமல் அதனுடன் சேர்த்து புகை படங்கள் எடுத்த வீட்டின் வரவேற்பறையில் அழகு பார்க்கும் குடும்பங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உடல் நலம் சரி இல்லையென்றால் மருத்துவரை வீட்டிற்கே அழைத்து வைத்தியம் பார்ப்பவர்களும் உண்டு. தங்கள் செல்ல பிராணிகளை நாய், பூனை மாடு என்று அவர்கள் முன்பு கூறிவிட்டால் அவர்கள் நம் மேல் கோபம் கொண்டு…. அதனுடைய பெயரை கூறி அழைக்குமாறு அறிவுறுத்துவார்கள். இதிலிருந்தே தெரியும் அவர்கள் தங்கள் வீட்டில் ஒருவர் போல் செல்ல பிராணிகளை பாவிப்பது.

வீட்டில் செல்ல பிராணிகளை வளர்க்காதவர்களை இப்பொது காண்பது அரிது அப்படி அவர்கள் விலங்குகளை வளர்க்க விட்டாலும் பூ செடிகள், கொடிகளை வளர்த்து சிறிது நேரமாவது அதனுடன் நேரத்தை செலவழிப்பார்கள். இங்கே வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் செய்யும் குறும்புத்தனத்தை ரசிப்பதோடு அதனை படம் பிடித்து காட்சிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். உங்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்ட குறும்புத்தன செல்ல பிராணிகளின் வீடியோக்களை பார்த்து மகிழலாம்.

You may have missed