கல்யாண வீட்டில் மணப்பெண்கள் செய்த கலாட்டாக்களை பாருங்க.. என்னென்ன பண்ணுறாங்கன்னு பாருங்க..!
திருமணங்களில் முன்பெல்லாம் கலாச்சாரத்திற்குத் தான் அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால் இப்போது ஆட்டம், பாட்டம் என திருமண வீடுகளே செம ஜாலியாக மாறிவிட்டது.
அதிலும், திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர். வழக்கமான திருமண படங்களோடு, இந்த அவுட்டிங் படங்களும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் சேரும் போது கல்யாண ஆல்பம், வீடியோத் தொகுப்புகள் செம கிளாஸிக்காக இருக்கும் என்பதாலேயே இப்படி செய்கின்றனர்.
இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது. சகதியில் இருந்து புரளும் ஜோடி, கேரளத்தில் கட்டிட வேலை செய்வது போல் சூட் செய்யப்பட்ட ஜோடி என போஸ் வெட்டிங் சூட்டாலேயே பேமஸான பல ஜோடிகள் உண்டு. அதையெல்லாம் விட இதில் சம்மந்தமே இல்லாமல் மேடை ஏறி ஆட்டம் போட்டு லைக்ஸ்களைக் குவிக்கும் மணமக்களின் தோழிகளும் உண்டு.
இங்கேயும் சில கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையைக் காட்ட செம க்யூட்டாக வீடியோ எடுத்துள்ளனர். அதிலும் கல்யாண வீடியோ மேக்கிங்கில் நடந்த குட்டி குட்டி சுவாரஸ்யங்கள் இதில் இதில் இடம்பெற்றுள்ளன. ஆனால் முக்கியமான தருணங்களில் மணமக்களின் சொதப்பலான மூவ்மெண்ட்கள், மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிபெறும் மாமியார் என சுவாரஸ்யக் காட்சிகளின் தொகுப்பை இதோ இந்த வீடியோவில் பாருங்கள்…