கடலில் வலை வீசிய மீனவர்கள்… வலையில் சிக்கிய வினோதத்தால் அதிர்ச்சியில் மீனவர்கள்..!

      இந்த உலகில் நாம் பார்த்திருக்கும் விலங்கினங்கள் மிகவும் குறைவு தான். காடுகளிலும், கடலிலும் கணக்கில்லாத மிருகங்கள் உள்ளன. ஊர்வன, பறப்பன, மிதப்பன என இந்த உலகில் லட்சக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. ஆனால் நாம் பரவலாக மனிதர்கள் நாய், கோழி, ஆடு, மாடு ஆகியவற்றோடு தான் தொடர்பில் இருக்கிறோம். அவை நாம் வீட்டிலேயே வளர்க்கும் பிராணிகளாகவ்ம் இருக்கின்றன.

  இதுபோக சிங்கம், புலி, கரடி ஆகியவற்றை சர்க்கஸிலும், யானைகளை கோயில்களிலும், குரங்குகளை காட்டை ஒட்டிய சுற்றுலாத்தளங்களிலும் பார்த்து வருகிறோம். ஆனால் நமக்குத் தெரியாத பல லட்ட்சம் உயிரினங்கள் உள்ளன. அதிலும் கடலுக்குள் பல ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. மீனவர்கள் வலைவீசி பிடிக்கையில் நாம் வழக்கமாக உண்ணும் மீன்வகைகள் மட்டுமே சிக்குவதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அது அப்படி அல்ல!

  அண்மையில் சிலிகா நாட்டில் அரிகா பகுதியில் கடலில் வலைவீசியபோது சிக்கிய மீனைப் பார்த்து மீனவர்களே அதிர்ச்சியடைந்தனர். மீன் கிடைத்தால் மகிழ்ச்சிதானே? ஏன் அதிர்ச்சியடைய வேண்டும் எனக் கேட்கிறீர்களா? ஆனால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த மீன் 16 அடி நீளம் இருந்தது. மீனவர்கள் கரைக்கு வந்ததும் ராட்சச கிரேன் மூலமே இந்த மீனை எடுத்தனர். 

  இந்த மீனை ஹைரிங்ஸ் ராஜா என்கிறார்கள். ஆழ்கடலில் வெப்ப மண்டலப் பகுதிகளில்தான் இந்த மீன் கிடக்கும். பொதுவாகவே இந்த மீன் பிடிபட்டால் சுனாமி, நிலநடுக்கம் போன்ற அசம்பாவிதம் ஏற்படும் என மக்களுக்குள் நிலவும் மூடநம்பிக்கையும் இந்த மீனை துரதிஷ்டம் என நினைக்க வைத்துள்ளது. சந்தை வாய்ப்பும் இல்லாத இந்த 15 அடி நீள மீன், மீனவர்களுக்கு கிரேனை அழைத்துவைத்து வலையில் இருந்து எடுக்கும் செலவுக்கே வைவைத்துவிட்டதாகவும் புலம்பி வருகிறார்கள். இதோ இந்த மீன் எவ்வளவு நீளமாக இருக்கிறது என நீங்களே பாருங்களேன். 

You may have missed