ஒரு நிமிஷம் கூட விட்டு விலகமாட்டேன்… குழந்தையை எப்படி கண்ணும் கருத்துமாய் பாதுகாக்குது பாருங்க இந்த ராட்வைலர் நாய்…!

dog_cares_child_vid_nz

நாய் நன்றியுள்ளது என வார்த்தைகளில் இல்லாமல் செயலிலும் நிரூபித்து காட்டும். நாய்கள் கண்தெரியாத மனிதர்களுக்கு பெருமளவில் நல்ல வழிகாட்டியாக செயல்படுகிறது. அதில் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த நாய்களில் ராட்வீலர். இந்த வகை நாய்கள் அதிகமாக கால் நடை வளர்ப்பிலும், அவற்றை பாதுகாப்பதிலும், வீட்டின் உரிமையாளருக்கு நல்ல பாதுகாவலனாகவும் விளங்குகிறது. காவல் துறைகளில் அதிகமாக பயன்படுகிறது. இவ்வகை நாய்கள் ஜெர்மன், மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளில் இறைச்சி கடைகளிலும், கால் நடைகள் பாதுகாப்பதிலும் செயல் புரிகின்றன. இதன் உயரத்தை விட சற்று நீளம் கூடுதலாக இருக்கும்.

என்ன தான் நாம் அன்பாக பாதுகாத்தாலும் வீட்டில் புதிதாக குழந்தைகள் அந்த வீட்டில் பிறந்தால் அந்த குழந்தையின் மேல் சிறப்பு கவனம் செலுத்தும் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படும். குழந்தைக்கு இன்னொரு தாயாக அருகில் இருந்து பாதுகாக்கும். இந்த வகை நாய்கள் குழந்தையுடன் தூங்குவது, விளையாடுவது என எந்நேரமும் குழந்தை இருக்கும் இடத்திலேயே நேரத்தை செலவழிக்கும். குழந்தையை யாரேனும் தொந்தரவு செய்தால் அவர்களை குழந்தையின் அருகில் வராத வண்ணம் பாதுகாக்கும்.

இங்கே காணொளியில் உள்ள குழந்தையை ராட்வீலர் என்ற ஜெர்மன் நாய் குழந்தை எங்கெல்லாம் எடுத்து செல்கிறர்களோ அங்கெல்லாம் சென்று அதன் அருகில் படுத்துக்கொள்கிறது. இதை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

You may have missed