ஐஸ் குச்சி, டப்பா மூடியை வைத்து பைக் செஞ்ச நம்மூரு வில்லேஜ் விஞ்சானியின் கண்டுபிடிப்பை பாருங்க..!
பொழுது போக வில்லை என்றால் அந்த காலத்தில் விளையாடுவார்கள், ஊர் கதை பேசுவார்கள் வேலை நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஒரு சில மனிதர்கள் தங்கள் நேரத்தை அவரவருக்கு தெரிந்த கலைப்பொருட்கள் செய்வதில் ஆர்வத்துடன் பணிபுரிவார்கள். இந்த காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சமூகவலைத்தளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். சமுத்திரத்தில் மூழ்கினால் முத்தெடுப்பார்கள் அது போல் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் மூழ்கி முத்தெடுப்பவர்களும் இருக்கிறர்கள். ஆம் உண்மை தான்…. தனக்கிருக்கும் திறமைகளை சமூகம் வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து உலகமே காண செய்கிறார்கள். ஒரு சில சமூக வலைத்தளத்தினர் இதன் மூலம் உலக அளவில் பிரபலம் ஆகின்றனர். அவர்களின் பதிவேற்றங்கள் அனைவருக்கும் உபயோகமானதாக இருப்பதோடு வேடிக்கையாகவும் இருக்கும்.
இதில் முக்கியமாக தனி நபரின் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி மற்றவருக்கு ஒரு ரோல் மாடலாகவும் இருப்பதோடு சமூக வலைதளத்தில் முத்தும் எடுக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.தாங்கள் விரும்பும் செயலை செய்வதன் மூலம் அதற்கான வெகுமதியும் கிடைக்க தான் செய்கிறது என்றால் மிகையல்ல. ஒரு சிலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் கோடிகளில் வருமானமும் ஈட்டுக்கின்றனர். இதை தான் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல் சமூகவலைத்தளத்தில் மூழ்கி முத்தெடுப்பது.
நிறைய காணொலிகளை நாம் கண்டு களிதாலும் சிறுவர்களுக்கு பிடித்தமான கானொலிகள் அதிகமாக விரும்பப்படுகின்றன. அவர்களுக்கு விளையாட்டு பொருட்களின் மேல் ஆசை இருக்கும். ஒரு சில குழந்தைகள் ஒரு விளையாட்டு பொருளை வாங்கி கொடுத்ததும் சில நாட்கள் அதனை பத்திரமாக வைத்து பாதுகாப்பார்கள். நாட்கள் செல்ல செல்ல அதனுள் என்ன இருக்கும் என்ற ஆர்வ கோளாறில் அதனை பிரித்து அங்கு வேறு ஆணிவேராக பிரித்து விடுவார்கள். மீண்டும் அதனை பழைய நிலைமைக்கு ஒன்றிணைத்து நேர்த்தியாக வடிவமைத்து விடுவார்கள். இதில் அவர்களில் கற்றல் திறன் ஒளிந்திருக்கும். நமக்கு வேண்டாத பொருளாக தோன்றும் எதுவும் அவர்களுக்கு பொக்கிஷமாக தெரியும். வேண்டாத பொருட்களையெல்லாம் அவர்களின் கற்பனைக்கு ஏற்ப ஒன்றிணைத்து புது வடிவத்தினை கொடுத்து அதனுடன் விளையாடுவார்கள். அது போல் இந்த காணொலியில் செலவே இல்லாமல் ஐஸ் குச்சிகளை வைத்து ஒரு புல்லெட் பைக்கையே உருவாகிவிட்டார்கள்.