உங்க வாழ்க்கையில் இப்படி ஒரு டான்ஸ் பாத்திருக்கவே மாட்டீர்கள்.. கைவிரல்களில் டேன்ஸ் ஆடி கலக்கிய பெண்..!

நடனம் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். இனிமையான இசையை கேட்டால் நடனம் ஆட தெரியாதவர்களும் தத்தக்க… பித்தக்க…. என்று நடனம் ஆடுவார்கள். நடனத்தில் பாரம்பரியமான பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக்களி என்று இந்தியாவில் அந்த… அந்த… மாநிலங்களுக்கென்று ஒரு தனி கலாச்சார மிக்க நடனம் கண்டிப்பாக இருக்கும். திருவிழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகளில் தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடி நிகழ்ச்சிக்கு மெருகு சேர்ப்பார்கள்.

தற்காலத்தில் பாரம்பரிய நடனங்களை விட வெஸ்டர்ன், பாப் கல்ச்சர் என்று சொல்ல கூடிய வெஸ்டர்ன் பாப் நடனம், கே-பாப் நடனங்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக விளங்குகிறது. சரி, இந்த நடனங்களில் எல்லாம் தங்கள் உடல் முழுவதையும் நடன அசைவுகளால் இசைக்கு ஏற்ப வளைத்து, நெளித்து ஆடுவார்கள். இந்த நடனத்தை பார்த்து எப்படி இவர்களால் மட்டும் இந்த மாதிரி நடனம் ஆட முடிகிறது என்று ஆச்சர்யப்படுவோம். ஆனால் இங்கு ஒரு பெண்மணி வித்தியாசமாக விரல்களால் நடனம் ஆடுகிறார். விரல்கள் மட்டுமே வளைந்து , நெளிந்து ஆடும் ஆட்டத்தை பார்த்துள்ளீர்களா என்றால் அது என்ன விரல்கள் மட்டும் ஆடும் ஆட்டம் என புருவத்தை உயர்த்துவோம்.

ஆம் , அப்படி ஒரு நடனத்தை தான் நாம் இங்கு காண போகிறோம். பத்து விரல்களும் பத்து வித நடன அசைவுடன் ஆடுகிறது. மெய் சிலிர்க்க வைக்கும் இந்த நடனம் காண்போரை வியக்க வைக்கும் அளவுக்கு நொடி பொழுதில் மாறும், விரல்களின் நடன அசைவு அற்புதமாக விளங்குகிறது. காற்றில் கொடிகள் அசைவது போன்று விரல்களும் அசைந்து ஆடும் நடனத்தை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் சமூகவலைத்தளத்தில் ரசித்துள்ளனர். தற்போது இந்த நடனம் வைரல் ஆகி வருகிறது.