இந்த ஜோடி மாதிரி வாழ்க்கையை ரசிச்சு வாழனும்… கேக் வெட்ட தயாரான காதல் ஜோடி… எதிர்பாரத விதமாக கீழே விழுந்த பிரம்மாண்ட கேக்… ஷாக்காகி போன சொந்தங்கள்.. அடுத்த சில நொடியில் காதலன் செய்த செயல்.. நெகிழ்ந்து போன சொந்தங்கள்..!
இந்த ஜோடி மாதிரி வாழ்க்கையை ரசிச்சு வாழனும்…
கேக் வெட்ட தயாரான காதல் ஜோடி… எதிர்பாரத விதமாக கீழே விழுந்த பிரம்மாண்ட கேக்… ஷாக்காகி போன சொந்தங்கள்.. அடுத்த சில நொடியில் காதலன் செய்த செயல்.. நெகிழ்ந்து போன சொந்தங்கள்..!
நம் வாழ்கை நம் கையில் என்பது நம் முன்னோர் வாக்கு. நம் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு நாமே பொறுப்பு. நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நம்மை எப்படி காயப்படுத்தினாலும், போராட்டமான சூழ்நிலை வந்தாலும் நாம் எவ்வாறு எடுத்துக்கொள்கிறோமோ அவ்வாறே நம் வாழக்கை அமையும். நல்லதே நினை நல்லதே நடக்கும்…. நம்மை சுற்றி நடக்கும் இக்கட்டான சூழ்நிலையை சந்தோசமாக ஏற்றுக்கொள்ளுவது நம்மால் முடியாத காரியமாக இருக்கும், இருப்பினும் அதில் இருக்கும் நன்மைகளையே அல்லது அதில் இருக்கும் பாடத்தினையோ கற்று கொண்டு மேற் கொண்டு தவறு நடக்காதவாறு நம்மை சீர்படுத்திக்கொள்வது நல்லது. எவ்வாறான சூழ்நிலை வந்தாலும் ஒரு சிலர் நேர்மறையான சிந்தனையுடன் கையாள்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். அது போன்று ஒரு நிகழ்வு தான் இங்கு அரங்கேறியுள்ளது, இங்கு அந்த மனிதர் கையாண்ட விதம் அனைவரின் முகத்திலும் புன்னகை தவழ வைத்தது தான் பெரியது.
புதுமண தம்பதிகள் தங்கள் வரவேற்பு நிகழ்ச்சியை கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஒரு பெரிய கேக் கொண்டு வரப்பட்டது. கேக் கொண்டு வரும் வழியில் கொண்டுவந்தவர்கள் ஒருவரில் கால் இடறி கேக் கீழே விழுந்துவிட்டது. அங்கு கூடி இருந்த அனைவரின் முகத்திலும் ஒரு பெரிய அதிர்ச்சி…. மேலும் நடக்கக்கூடாதது நடந்தது போன்ற உணர்வு. மணமகன் மற்றும் மணமகள் இருவரும் அதிர்ச்சியடைந்த நிலையில் மணமகன் முன் சென்று கேக்கை ருசிபார்த்து கொண்டே தனது துணையையும் முன் வருமாறு அழைத்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத மணமகள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு மணமகனின் செயலை பார்த்து புன்னகை பூத்தார். இக்கட்டான சூழலிலும் மணமகன் கையாண்ட விதம் அந்த இடத்தில் உள்ளவர்களை அதிர்ச்சிலிருந்து மீட்டு சந்தோச மனநிலைக்கு மாற்றியது. இந்த ஒரு காட்சி அனைவரது வாழ்விற்கும் கற்று கொடுக்கும் பாடம் எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையிலும் நேர்மறையான சிந்தனையுடன் செயல்பட்டால் வாழ்க்கையை ரசித்து வாழ முடியும் என்பதை காட்டுகிறது.