ஆற்றில் குளித்த மக்கள்.. திடீரென அருகில் வந்த விஷ பாம்பு.. எப்படி நீச்சல் அடிக்குதுன்னு பாருங்க…!

      பாம்பு எப்போதும் நம்மை அச்சமூட்டக் கூடியது. பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என பழமொழியே சொல்லும் அளவுக்கு பாம்பு பயங்கரமானது. ஆனால் நம் தமிழர்களின் மரபில் பாம்பு, தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பாம்பு வழிபாடே பிரதானம். பாம்புகளுக்கு என்றே இங்கே பிரத்யேக ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது.

பாம்புகள் நாமாக அவைகளை தொந்தரவு செய்யாத வரை அவை நம்மை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் பாம்பைப் பார்த்ததும் நம்மையும் அறியாமல் மிகவும் பயந்து போய்விடுகிறோம். இன்னும் சிலரோ பாம்பை மிகவும் அசால்டாக டீல் செய்வார்கள். இங்கேயும் அப்படித்தான் ஒரு ஆற்றில் அழகாக தண்ணீர் போய்க்கொண்டிருந்தது. மக்கள் அந்த ஆற்றில் அமர்ந்து ரிலாக்ஸ்டாக குளித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது விசப் பாம்பு ஒன்று திடீரென தண்ணீரில் நீந்து வந்தது. இதைப் பார்த்ததும் மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இன்னும் சிலரோ கரைப்பகுதியில் நின்று அதை வீடியோவாகவும் எடுத்து மகிழ்ந்தனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்