அத்தீ இது பைக்கா இல்ல ஷேர் ஆட்டோவா.. சாதாரண இருசக்கர வாகனத்தில் இவ்ளோ பேர் பயணிக்கலாமா.. வியந்து போன நெட்டிசன்கள்..!
அனைவருக்கும் ஒரு லாங் ட்ரிப் போக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அதுவும் நமக்கு மனதுக்கு பிடித்தவர்கள் உடன் சென்றால் அது நமக்கு மிகவும் மறக்க முடியாத நினைவாய் மாறி விடும். குடும்பமாய் அனைவரும் சேர்ந்து ஒரே வண்டியில் போக வேண்டும் என்று நினைத்திருப்போம் அதுவும் காரிலோ அல்லது சொகுசு பேருந்திலோ குடும்பமாக பயணிக்க வேண்டும் என்று தான் யோசித்திருப்போம்.
அன்றாடம் நம் வாழ்க்கையில் பயணங்கள் மிகவும் சுவாரசியமாகவே இருக்கும். இதுவரைக்கும் நாம் பார்க்கும் பயணங்கள் சாதாரணமாகவே நமக்கு தோன்றியது தான் இந்த வீடியோவை பார்ப்பதற்கு முன் வரையிலும்…..
இங்கேயும் ஒரு குடும்பம் வண்டியில் பயணிக்கத்தான் செய்கிறார்கள். ஆனா அது என்ன வண்டி என்று நீங்களே பாருங்க….இரு சக்கர வாகனத்தில் ஒரு குடும்பமே பயணிக்கிறது. ஒரு ஆண் அந்த இருசக்கர வண்டியை ஓட்ட இரண்டு பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் அதில் பயணிக்கிறார்கள்.
பொதுப் போக்குவரத்தை இவர்கள் தேடுவதை இல்லை pic.twitter.com/qQBxBdKl2T
— RAJA (@meeransahib5) August 31, 2022