அதிகப்படியான கொசு, பூச்சித் தொல்லையா..? இயற்கை முறையில்
விரட்ட இது மாதிரி செய்யுங்க அதிக பணம் மிச்சம்…


பெரும்பாலான வீடுகளில் கொசு, பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். இதைத் துரத்த நிறையவே ஆங்கில மருந்துகளை உபயோகிப்பார்கள். அதன்மூலம் கொசுக்கள் ஒழிகிறதோ இல்லையோ, நமக்கு உடலுக்கு ஒவ்வாமையைத் தந்துவிடுகிறது. வீட்டில் இருக்கும் கொசுத்தொல்லையை ஒழிக்க எளிமையான முறையில் ஒரு சூப்பர் டிப்ஸ் இருக்கிறது. வாருங்கள் அதுகுறித்து தெரிந்துகொள்வோம்.

இரண்டு கைப்பிடி அளவு வேப்பிலையை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் அதை பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 300 மில்லி அளவுக்கு விளக்கெண்ணெயை விட வேண்டும். இந்த எண்ணெய் நன்கு சூடானதும், அரைத்து வைத்த வேப்பிலையை உள்ளே போடவேண்டும். இது நன்றாக கொதித்து அடங்கும். அதன் பின் அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெயை ஆறவிட வேண்டும். இது நன்கு ஆறியதும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டவேண்டும். அதனோடு நூறுகிராம் சூடத்தை பொடியாக்கி சேர்க்கவேண்டும்.

இதை இப்போது நன்றாகக் கலக்க வேண்டும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் விட வேண்டும். அதன் மூடிப்பகுதியில் திரி போட்டு வைக்க வேண்டும். அரைமணிநேரம் திரி ஊறியதும், அரைமணிநேரம் கழித்து பொசு பூச்சித்தொல்லை இருக்கும் அறையில் இந்த விளக்கை ஏற்றவேண்டும். இந்த எண்ணெயின் வாசனைக்கு பூச்சி எதுவும் வராது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். இந்த வீடியோவில் வேறுசில முயற்சிகளும் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்கள்..