அடேங்கப்பா இப்படியொரு தண்ணீர் விளையாட்டா? மொத்த ஊரே சேர்ந்து எப்படி என்ஜாய் பண்ணுறாங்க பாருங்க..!


முந்தைய தலைமுறையில் எல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளோடு அதிக நேரத்தை செலவு செய்தனர். ஆனால் இப்போது பெண்களும் அதிகமானோர் பணிக்குச் செல்வதால் பெற்றவர்கள் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவதே குறைந்துவிட்டது.

அதுமட்டும் இல்லாமல் முன்பெல்லாம் சுற்றத்தார் உடன் சேர்ந்து விளையாடிய குழந்தைகள் இப்போது வீட்டுக்குள் லேப் டாப், செல்போனுக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர். இதனால் அவர்களின் கண்பார்வையும் சீக்கிரம் கெட்டுப் போய்விடுகிறது. முன்பெல்லாம் குழந்தைகளும், பெற்றோருமாக சேர்ந்து கண்ணாம்பூச்சி, பல்லாங்குழி என நிறைய பாரம்பர்ய விளையாட்டுக்களை விளையாடினார்கள். இன்று அதெல்லாம் இல்லை. இதோ இங்கே பாருங்கள். இந்த தலைமுறையில் நாமெல்லாம் தவறவிட்ட சொர்க்கம் என்றே இதைச் சொல்லலாம்.
இங்கே ஒரு அருமையான தண்ணீர் விளையாட்டு விளையாடுகின்றனர் இந்த கிராம மக்கள். அணையில் இருந்து திறந்துவிட்ட தண்ணீர் கால்வாய் வழியாக பாய்ந்து ஓடுகிறது. அதை ஒரு திருவிழா போல் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர் அந்த ஏரியா வாசிகள்.

கால்வாயின் மேல் ஒரு உருண்டைப் பலகையைக் கட்டியுள்ளனர். அந்த பலகையில் இளைஞர்கள் கீழே விழாமல் நடப்பதுதான் போட்டி. இதில் யார் அதிகதூரம் நடக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். கர்ணம் தப்பினால் மரணம் என்பதைப் போல் இந்த கம்பியில் இருந்து கொஞ்சம் மிஸ்ஸானாலும் தண்ணீருக்குள் பொத், பொத்தென விழுந்துவிடுகின்றனர். இதோ நீங்களே இந்த விளையாட்டைப் பாருங்களேன்.