பள்ளிக்கு சென்று வீடு வந்த அண்ணன்கள்… வந்ததும் குட்டி தங்கை செய்த வேற லெவல் பாசத்தைப் பாருங்க…!

annan_pasm_vid_nz

அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம்.

அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் தங்கைக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். அண்ணன்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது.

அதேபோல் குழந்தைப் பருவம் என்பது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத பருவம். இந்த காலத்தில் தான் உள்ளன்போடு நேசம் காட்டுவார்கள். அதிலும் குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலும் நம்மை வெகுவாகவே ரசிக்கவைக்கும். அவர்களின் செயல்கள் நம்மை ரொம்பவும் ரசிக்கவைக்கும். இங்கேயும் அப்படித்தானொரு குட்டிக் குழந்தைக்கு மூன்று அண்ணன்கள். மூவரும் பள்ளிக்குச் சென்றிருந்தனர். வார்த்தையால் அண்ணன்களைத் தேடுவதை வெளிப்படுத்தத் தெரியாத குட்டிக்குழந்தை ஒன்று அதை மனதிலேயே நினைத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் பள்ளிக்கூடம் விட்டு தன் அண்ணன்கள் எதிரே வர, துள்ளிக்குதித்து மான் குட்டி போல ஒடிப்போய் கட்டி அணைக்கிறாள் இந்த பாசக்காரத் தங்கை.

இதோ இந்த காட்சியை நீங்களே பாருங்களேன். அதன் பின் நீங்களே சொல்வீர்கள். இந்தப் பாசத்தின் முன்பு எதுவுமே பெரிய விசயம் இல்லை என…இதோ நீங்களே பாருங்கள்! …

You may have missed