தாயை இழந்து பரிதவித்த நாய்க்குட்டிகள்… தாயாக மாறிய பசு.. வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு..!

cow_milk_dog

பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அது, அனைவருக்கும் பொதுவானது. அதிலும் தாய் பாசம் என வந்துவிட்டால்? மனிதன் என்ன பிராணி என்ன? இங்கேயும் அப்படித்தான்…நாய்க்குட்டிகளுக்கு தாயாக மாறி பசு செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

உத்திரப்பிரதேசத்தில் நாய் ஒன்று குட்டிகளைப் போட்டது. சாலையைக் கடக்கும் போது அந்த நாய் வாகனம் ஒன்றில் அடிபட்டு செத்துப்போனது. இதனைத் தொடர்ந்து அந்த நாய்க்குட்டிகள் தாய்ப்பால் கிடைக்காமல் தவியாய் தவித்து வந்தன. இந்நிலையில் அந்தப்பகுதியில் இருந்த பசு மாடு ஒன்று, இந்தக்குட்டிகளுக்கு பால் கொடுக்கத் துவங்கியுள்ளது.

தாயை இழந்த நாய்குட்டிகளுக்காக படுத்துகிடந்து டன் மடிக்காம்புகளில் இருந்து இந்தப்பசு பால் கொடுக்கிறது. பாசமிகுதியில் அந்த நாய்க்குட்டிகளின் பசியறிந்து மாடு செய்யும் இந்தச் செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே இந்தக் காணொலியில் பாருங்கள்.

You may have missed