தள்ளாடும் வயதில் மான் குட்டி போல் துள்ளிகுதித்து ஓடிவந்த தாத்தா… என்ன காரணம் தெரியுமா? உங்கள் மனதை உருகவைக்கும் காட்சி..!
முன்பெல்லாம் குழந்தைகள் பண்பாடுமிக்கவர்களாவும், அதிகளவில் பொறுப்பு உடையவர்களாகவும் இருந்து வந்தனர். இப்போதைய குழந்தைகளுக்கு பொறுப்பும், பண்பாடும் முன்பைப் போல் இல்லை. அதற்குக் காரணம், இப்போது பெரும்பாலான வீடுகளில் தாத்தா, பாட்டி இல்லை.
பெற்றோர்கள் வேலை நிமித்தம் ஏதோ ஒரு பெருநகரத்தில் இருப்பதால் வீட்டில் வயதானவர்கள் இன்று இல்லை. ஆனால் தாத்தா, பாட்டிகளுக்கு எங்கு இருந்தாலும் தங்கள் பேரன், பேத்திகளைப் பார்ப்பது என்றால் மனதுக்கு ரொம்பப் பிரியம். இங்கேயும் அப்படித்தான். ஒரு தாத்தா இருந்தார்.
வயோதிகத்தின் விளிம்பில் இருக்கும் அந்த தாத்தா, நடப்பதற்கே வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தித்தான் நடப்பார். அப்படி ஒரு சூழலில் இருக்கும் அந்த தாத்தாவின் மகள் அவரது வீட்டிற்கு வந்தார். வெளிநட்டில் இருக்கும் அந்த மகளுக்கு அங்கேயே குழந்தை பிறந்து முதன்முதலாகக் குழந்தையை எடுத்து வந்திருந்தார். முதன்முதலாகத் தன் பேரக்குழந்தையை பார்க்கும் அந்த தாத்தா, உற்சாக மிகுதியில் கையில் இருக்கும் அந்த வாக்கிங் ஸ்டிக்கை தூக்கி வீசிவிட்டு பேரப்பிள்ளையைக் கொஞ்ச மான்குட்டி போல் துள்ளிக்குதித்து ஓடுகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.
Grandpa meeting his grandson for the first time ❤️❤️ pic.twitter.com/lx5UjvjTRl
— Learn Punjabi (@learnpunjabi) May 16, 2020