தன் சகோதரனை பிரிந்த சோகத்தில் தாயுடன் சேர்ந்து கத்தி அழும் நாய் குட்டி… கல் நெஞ்சைக் கரைய வைக்கும் காட்சி….!

மனிதர்களுக்கு மட்டும் தான் உணர்வுகள் உண்டு என்று இல்லை. நம்மை போன்ற எல்லா உயிரினங்களுக்கும் உணர்வுகள் உண்டு.இங்கு ஒரு நாயானது தனது குட்டியை இழந்ததால் அழும் காட்சி காண்போரை கண் கலங்கச்செய்துள்ளது.

சாலையில் வேகமாகச் செல்லும் போது குறுக்கே என்ன வருகிறது என்பதைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு வேகமாகச் செல்கிறார்கள். அப்படியும் என்ன குறுக்கே வருகிகறது என்பதை பார்த்தால் கூட வாகனத்தை நிறுத்துவதற்குள் வாகனத்தின் முன் சென்ற உயிரினத்தின் உயிர் போய் விடுகிறது.

அந்த வகையில் தற்போது ஒருவர் சாலையில் வாகனத்தில் சென்றவர் நாய் குட்டியின் மேல் தனது வாகனத்தை ஏற்றி விட்டார். அதனால் அந்த நாய் குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த அந்த நாய் குட்டியின் பக்கத்தில் அதன் தாய் நாயானது கதறி அழுவது கல் நெஞ்சையும் கரைய வைத்துள்ளது. இறந்த நாயின் தாய் நாயும் மற்றும் ஒரு குட்டி நாயும் சேர்ந்து மனமுருக அழும் காட்சி நெஞ்சை கரையச் செய்கிறது.