போலீஸ் அதிகாரியான பின் தன் அப்பாக்கு ஆசை மகள் செய்த மரியாதையை பாருங்கள்…

பொதுவாக தாய் தந்தை தான் பிள்ளைகளுக்கு உதாரணமாக விளங்குவார்கள். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. தந்தையின் பாசம் வெளியில் தெரியவில்லை என்றாலும் தன் பிள்ளைகள் நல்ல ஒரு நிலைமைக்கு வர வேண்டும் என அத்தனை கஷ்டத்தையும் தாங்கி கொள்பவர் தான் தந்தை. தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை தன்னுடைய பிள்ளைகள் கஷ்டப்பட கூடாது என்று நினைக்கும் தந்தைகள். நமக்காக கஷ்டப்படும் அப்பாக்கள் நம்முடைய வெற்றியிலும் பங்கு கொள்ள வேண்டும் என நினைக்கும் பிள்ளைகள் அதற்க்கு உதாரணமாக இங்கு ஒரு காணொளியை பாருங்கள்.

இங்கு ஒரு சகோதரி தன்னுடைய விடா முயற்சியினால் கஷ்டப்பட்டு காவல் துறையில் பணியாற்றும் வாய்ப்பினை பெற்றுள்ளார். அந்த நிலைமைக்கு வருவதற்கு அவருக்கு முதலில் ஊன்று கோலாக இருந்திருப்பது அவருடைய தந்தை தான. அதனால் அவருக்கு கிடைத்த சந்தோசம் வெற்றி அனைத்திலும் அவருடைய தந்தையும் பங்கு கொள்ள வேண்டும். என நினைத்து தன்னுடைய தலையில் இருக்கும் தொப்பியினை களத்தி தன்னுடைய தந்தையின் தலையில் வைக்கிறார்.

ஆனால் அந்த தந்தையோ அதனை வாங்கி கொள்ள மறுக்கிறார். இருந்தாலும் மகள்களின் பாசத்திற்க்கெல்லாம் தந்தைகள் அடிமை அல்லவா. தன்னுடைய மகளின் பிடிவாதத்தால் அவரால் அதனை வேண்டாம் என கூற முடியாமல் தன்னுடைய மகளின் கையால் வாங்கி தன்னுடைய தலையில் வைத்து கொள்கிறார். இதனை பார்க்கும் அனைவருக்கும் ஆனந்தம் பெருகும். தற்போது இந்த காணொளி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .