சுத்தம் சோறு போடும் தான்.. அதுக்காக இப்படியா…. காலில் ஒரு சொட்டு தண்ணீர் படலையே… மழை நீரில் வித்தை காட்டிய பெரியவர்……!
வடகிழக்கு பருவமழை தமிழ் நாட்டில் வெளுத்துக் கொண்டிருக்க பலர் மழையை ரசித்து தெருக்களில் ஓடும் நீரில் நடனம் ஆடுவதும், நீச்சல் அடிப்பதும், குட்டிக்கரணம் அடித்தும் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை மழைநீரில் விளையாடி கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு மழைக்காலங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. வெதர் மேன் அவர்களிடம் எப்போது அடுத்தது மழை பொழியும், எப்போது பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை கிடைக்கும் என்று 2k-கிட்ஸ் பண்ணாத அலப்பறைகள் இல்லை. அவரே போதும் டா சாமி …..இனி என்னிடம் இவ்வாறு கேள்வி எழுப்பாதீர்கள் என்று சொல்லும் அளவிற்கு தொந்தரவு செய்தனர் மாணவர்கள்.
பள்ளிகளில் நீர் தேங்குவதால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழலிலும், வீடுகளுக்குள் வெள்ளம் சென்றதால் அதனுள் வாழமுடியாத சூழலிலும், விவசாய நிலங்களில் தேவைக்கு அதிகமாக தேங்கிய தண்ணீரால் பயிர்கள் அழுகிய நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இப்படி மக்கள் ஒரு சில சங்கடங்களால் திண்டாடி கொண்டிருந்தாலும், நீர் பிடிப்புகளிலும், குளம், கண்மாய், குட்டை, கிணறு, ஏரி என அனைத்து நீர் நிலைகளும் தண்ணீர் நிரம்பி வருகின்றன.
ஆங்காங்கே தேங்கிய மழைநீரை மக்களுக்கு இடையூர் இல்லாமல் அரசு அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இப்படி மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்து வரும் நிலையில், ஒரு சிலர் அதிபுத்திசாலிகளாக மழை நீரால் தமக்கு எந்த பாதிப்பும் வந்து விட கூடாது என வேலை செய்துகொண்டிருக்கின்றனர். ஆடுகள் மழையில் நனையாமல் மேய்ச்சலுக்கு செல்வதற்காக தாமே தயாரித்த ரயின்கோட்டை ஆடுகளுக்கு அணிவித்து மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இங்கே ஒருவர் தம் கால்களில் தண்ணீர் பட்டு விட கூடாது என்பதற்காக காலில் 2அடி உயரம் கொண்ட பிளாஸ்டிக் நாற்காலியை கயிற்றின் மூலம் இணைத்து கால்களில் கட்டி நடந்து வருகிறார். இதை பார்த்த இணையவாசிகள் குறுக்கே பெரிய வாகனங்கள் வந்தால் இவர் எப்படி கரையேறுவார் என கமெண்ட் செய்து வருகின்றனர். தேங்கிய நீரில் இருந்து தப்பித்து நடந்து சென்றவரின் காட்சிகள் இங்கே காணலாம்..