கோழிக் குஞ்சுகளை வேட்டையாட வந்த பாம்பு.. போராடி காப்பாற்றிய தாய்க் கோழி.. மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி..!

தாய்ப்பாசம் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. தாய்ப்பாசத்தில் மனிதர்களுக்கு சற்றும் விலங்கினங்கள் குறைவானது அல்ல. சில தினங்களுக்கு முன்பு குரங்கு குட்டி ஒன்று, மின்சார வயரில் மாட்டிக்கொண்டது.தாய் குரங்கு அதை மீட்கப்போராடியக் காட்சி இணையத்தில் வைரலானது.

இப்போது கோழி ஒன்று பாம்பிடம் இருந்து தன் குட்டிகளைக் காக்க போராடிய காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது. குறித்த அதக்காட்சியில் கோழி ஒன்று தன் குஞ்சுகளோடு நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பாம்பு ஒன்று வந்தது.

அது குஞ்சுக்கோழிகளை சாப்பிட நினைத்து நெருங்கியது. உடனே தாய்க்கோழி விசம் ததும்பிய பாம்போடு சண்டை போட்டது. கடைசி வரை போராடி தன் கடைசி குஞ்சையும் கூட பாம்பு இருந்த இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பாதுகாப்பாக அழைத்துப் போனது. இதை நீங்களே பாருங்கள்..மெய்சிலிர்த்து போவீர்கள்..