கரடியின் தாய் பாசத்துக்கு கட்டுப்பட்டு மரியாதை கொடுத்து அணிவகுத்து நின்ற வாகனங்கள்.. மனதை உருக வைக்கும் காட்சி..!

karadi_kutti_trafic

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களே இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்.

எப்போதுமே தாய் பாசத்துக்கு பணம் பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு தாய் பாசம் உயர்ந்தது. அந்தவகையில் இங்கே ஒரு கரடியின் பாசத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போன வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

கருப்பு கரடி இனத்தைச் சேர்ந்த கரடி ஒன்று தன் இரு குட்டிகளையும் அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க வேண்டி இருந்தது. உடனே, தாய் கரடி தன் ஒரு குடியை வாயில் கவ்விக்கொண்டு சாலையைக் கடக்கிறது. மீண்டும் இன்னொரு குட்டியை அதேபோல் வாயில் கவ்வி அழைத்து வரச் செல்லும்போது, ஏற்கனவே சாலையைக் கடந்து கொண்டுபோய் விட்ட கரடி மீண்டும் வந்துவிடுகிறது. மிஸ்டர் பீன் நகைச்சுவையையே மிஞ்சும் அளவுக்கு இரு குட்டிக் கரடிகளும் தாய் கரடியை பாடாய் படுத்தி வருகிறது.

இவ்வளவும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்தாலும் வாகன ஓட்டிகள் அந்த தாய் கரடியின் பாசத்தை புரிந்து கொண்டு சாலையில் இடையூறு செய்யாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தி தாத்தா, ‘ஒரு தேசத்தின் மகத்துவத்தை அதன் விலங்குகள் நடத்தப்படும் விதத்தை வைத்து மதிப்பிட முடியும்’ என்பார். அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதோ நீங்களே இதைப் பாருங்கள்…

You may have missed