இவர்களின் இசைக்கு ஆடாத கால்களும் ஆடும்… கேரள பாரம்பர்ய செண்டை மேளம் அடித்து செம க்யூட்டாக ஆடிய இளம் பெண்கள்..!
முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.
அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.
பொதுவாகவே கேரளத்தின் செண்டை மேளத்துக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. செண்டை மேளம் ஊர்கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் போது அனைவருமே சொக்கிப் போவது உண்டு. கேரள பாரம்பர்யக் கலையான இதில் முதலில் ஆண்கள் மட்டுமே மேளம் இசைத்தும், ஆடியும் வந்தனர். ஆனால் இப்போது எல்லாம் பெண்கள் மட்டுமே பிரதானமாக இருக்கும் செண்டை மேளக் குழுக்கள் எல்லாம் வந்துவிட்டன. இப்போது, ஒரு செண்டை மேளக்குழுவில் இருக்கும் கேரளத்தின் அழகிய இளம் பெண்கள் இசைத்துக்கொண்டே நடனத்தில் பட்டையைக் கிளப்பும் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ அந்த வீடியோ…இதை இதுவரை 6 லட்சத்துகும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.