இருந்தாலும் இந்த யானைக்கு குசும்பு அதிகம்தான்… புல்லெட் பாண்டி ஸ்டைலில் சும்மாயிருந்த பைக்குக்கு நடந்த நிலைமையை பாருங்க..!

yanai_bulet_pandi_nzz_trends

யானை வரும் பின்னே…மணி ஓசை வரும் முன்னே …….. யானை என்று சொல்ல கேட்டதும்….எங்கே வருகிறது என்று கேட்போம். 90-ஸ் கிட்ஸ் சிறுவர்கள் தூரத்தில் இருந்து வரும் யானையின் மணி ஓசை கேட்டதும் சாலைகளில் யானையை பார்ப்பதற்காக கூட்டம் கூடுவார்கள். யானையானது அமைதியான குணம் கொண்டது. அவற்றை தொந்தரவு செய்யாத வரை அமைதியாக பழகும் இயல்புடையது. பொதுவாக விலங்குகள் அமைதியாக நகரும் குணம் கொண்டது. மிருகக்காட்சி சாலைகளில் நாம் பார்க்கும் சிங்கம்,புலி யானை போன்ற விலங்குகள் அமைதியாக இருக்கும். இவ்வாறான விலங்குகளை தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மை சீண்டும்.

இங்கே இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் வாக்கிங்க் சென்ற யானை நானே ஆள் இல்லாத சாலையில் ஓரமா போய்ட்ருக்கேன்….. நீ என்ன வழியில நிக்குற….. என்கிற பாணியில் ஓரமாக நிறுத்தப்பட்ருக்கும் பைக்கிற்கு பின்னங்காலால் ஒரு உதை விடுகிறது.மேலும் ஒரு உதை விட்டு தனது பாதையில் இருந்து அகற்றி விட்டு நடை பயணத்தை தொடர்கிறது.

இதை காணும் போது நம்முடைய தலைவர் வடிவேலு காமெடி ஞாபகம் வரும். புல்லெட் பாண்டி வரும் போது ஓரமாக நிற்காமல்……. என்ற காமெடி நினைவுக்கு வந்து செல்லும். இதை காண்பவர்கள் என்ன நடக்கிறது…. கோபத்தில் செய்ததா இல்லை என்றால் வடிவேலு பாணியில் செய்ததா என்று ஆராய தோன்றும்.

You may have missed