இந்த மனசு தான் சார் கடவுள்… ஐந்தறிவு ஜீவனிடம் இருக்கும் மனித நேயம் கூட இந்த மனிதர்களிடம் இல்லை..!

dog_help_blind_man_nz

நிகழ்கால மனிதர்கள் எந்திர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சக மனிதர்களிடம் பேசவும், பழகவும் விருப்பமில்லாமல் டார்கெட் நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பார்க்க மனமில்லாமல் செல் போனில் உலக நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நாம் இயல்பான குணங்களில் இருந்து மாறி வருகிறோம் என்பது உண்மை. நாம் மாற விரும்பினாலும் மாற விரும்பாவிட்டாலும் தற்போதைய உலக நடப்புகள் நம்மை மாற்றி வருவதும் உண்மை. மனிதனை விலங்கிடம் இருந்து வேறுபடுத்துவது மனிதாபிமானம். சக மனிதர்களிடம் நாம் நடந்து கொள்ளும் விதமும், ஒருவருக்கு இக்கட்டான சூழ்நிலைகளில் செய்யும் உதவியும்.

கண்பார்வையற்றவர்கள் தங்களது அன்றாட பணிகளை செய்ய மிகவும் சிரமப்படுவர். வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு ஒருவருடைய துணை அவசியமானதாகும்.

இந்த காணொலியில் இடம் பெற்ற கண் தெரியாத நபர் ஒருவர் ஸ்டிக்கின் உதவியால் படிக்கட்டுகளை கடக்கும் போது எஜமானின் பின்னால் சென்ற நாய் அந்த நபரின் ஸ்டிக்கினை வாயால் கவ்வி கொண்டு முன்னேறுகிறது. நாய் வராததை கண்ட எஜமானர் உதவி புரிந்த நாயின் வாயில் இருந்த ஸ்டிகை அவர் பிடித்து அந்த நபரருக்கு உதவி புரிந்தார். மனிதாபிமானம் உடைய நாயின் செயல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

You may have missed