அன்றே கணித்தார் கவியரசு கண்ணதாசன்… பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை…. மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை… பாடல் உண்மையான சம்பவம்…!

real_pankara_vid_nzz

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை…..வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை…… என்ற கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடலில் வரும் வரிகளை மெய்யாக்கி உள்ளது இந்த காணொலியில் இருக்கும் காட்சிகள். பணம் இருக்கும் மனிதரிடம்…..மனம் இருப்பதில்லை….. மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை…… இன்றைய சமுதாயத்தில் நின்று பேசுவதற்கே நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருக்கிறோம். ஒருவரிடம் பேச வேண்டும் என்றால் கூட நம் வாழ்வில் அன்றாடம் செய்ய வேண்டிய பணிகளில் தாமதம் ஏற்படும் என்பதற்காக இணையத்தின் மூலம் பேசி வருகிறோம். உலகம் உள்ளகையில் சுருங்கி விட்டத்தை போல இங்கு பல மனங்களும் சுருங்கி விட்டன.

நாம் வளர்ச்சி பாதையை நோக்கி சென்றாலும் நல்ல மனம், புத்தி கொண்டவர்களால் மட்டுமே நல்ல சமுதாயத்தை அமைக்க முடியும். தன்னம்பிக்கை கொண்ட நல்ல மனிதர்கள் எந்நாளும் தோற்பதில்லை. ஒருவருக்கு உதவ முற்படும் சிலர் இவரால் பின் நாட்களில் நமக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்று ஆராய்ந்தே உதவி சென்றனர். இங்கே திறந்த மனதோடு ஒருவருக்கு தான் விற்க இருந்த சுண்டலை இலவசமாக கொடுத்து பெரும் புகழை ஈட்டியுள்ளார் ஒருவர்.வயதான காலத்திலும் தான் சம்பாதித்து வருமானத்தை ஈட்டும் முதியவர் தள்ளு வண்டி வாங்க கூட காசு இல்லாத நிலைமையிலும் மாற்று திறனாளி ஒருவரிடம் பணம் வாங்காமல் அவர் கேட்ட சுண்டலை கொடுக்கிறார்.

எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மாற்று திறனாளி ஒருவருக்கு தின் பண்டத்தை கொடுத்தது அனைவரையும் நெகிழ செய்தது. இவரை போன்றோர்கள் தான் நல்ல சமுதாயத்தினை உருவாக்க முடியும் என்று சமூகவலைதளவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். உங்களுக்காக மனம் நெகிழவைக்கும் அந்த காட்சிகள் இதோ …..

You may have missed