பிரபுதேவாவையே மிஞ்சிடுவாரு போலயே! யாருப்பா இந்த மனுஷன்..? கண்ணுப்படப் போகுதுப்பா… சுத்தி போடச் சொல்லுங்க…!

semma_talent_vid_nzz

திறமை என்பது  வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய மிடில்கிளாஸ் மனிதரின்    திறமை இணையவாசிகள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 அப்படி அந்த நபர் என்ன  செய்தார் எனக் கேட்கிறீர்களா? முறைப்படி நடனமெல்லாம் கற்றுக்கொள்ளாத நபர் அவர்.  இயல்பாகவே  வீட்டில் டிவி ஓடுவதைப் பார்த்தே நடனம் கற்றுக் கொண்டிருக்கிறார். முறைப்படி, நடனம் கற்றுக்கொள்ளாத அவர் பிரபுதேவாவின் காதலன் படத்தில் இடம்பெற்ற  பாடலுக்கு அச்சு, அசல் அவரைப் போலவே, சில இடங்களில் அவரையே ஓவர்டேக் செய்வது போல் ஸ்டெப் போட்டு செம நடனம் ஆடுகிறார். இதை அதுவும் தெருவில் இருந்து ஆடுகிறார். அதை சுற்றிலும் இருந்து பொதுமக்கள் மிகவும் ரசிக்கின்றனர். 

  இதை சாலையோரவாசி ஒருவர் வீடியோவாக எடுக்க அது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் நடனத்தில் இந்த மனிதர் பிரபுதேவாவையே மிஞ்சிடுவாரு போலருக்கே என கமெண்ட் செய்துவருகின்றார். இதோ நீங்களே அதைப் பாருங்களேன்..நிச்சயமாக இவருக்கு சுற்றித்தான் போடவேண்டும். வீடியோ இதோ!…

You may have missed