பாடி பில்டர்களை மிஞ்சிய ஷோல்டர்… மிரண்டு போன படவா கோபி..!

sholder_cutting_nzz

தற்போது உள்ள காலகட்டத்தில் உடல் உழைப்பு இல்லாத காரணத்தால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சற்று பருமனான தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர். 20, 30 வருடங்களுக்கு முன்பு இப்படி இருந்ததில்லை. அப்போது சிறுவர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்த்து தெருக்களில் ஒடி, ஆடி விளையாடுவர். இளைஞர்கள் கபடி, கிரிக்கெட், ஊரை சுற்றி வலம் வருதல், சைக்கிளில் பிரயாணம் செய்தல், குளத்தில் நீச்சல் அடித்தல் என்று அன்றாடம் தங்கள் பணிகளில் மூழ்குவார்கள். பெண்கள் வீட்டு வேலைகள் செய்வது முதல், விவசாய வேலைகள் செய்வது என்று அவர்களுக்கு நேரமே இல்லாமல் ஒடி கொண்டிருப்பர். ஆண்களும் விவசாய வேலைகள் முதல் வேறு வருமானம் ஈட்டும் தொழில்களுக்கு செல்வது என்று தங்கள் நாட்கள் கரைவது கூட தெரியாமல் உழைபார்கள். அவர்களுக்கு ஒய்வு என்பதே கிடைக்காமல் அன்றாடம் உழைத்துக் கொண்டிருப்பார்கள்.

21-ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து மாற்றங்கள் வேகமாக நடந்தது. சிறுவர்கள் வீட்டின் வெளியே விளையாடுவதை காட்டிலும் வீட்டினுள்ளே வீடியோ கேம், கம்ப்யூட்டர் ஆன்லைன் கேம் என்று தங்கள் வாழ்க்கையே மாற்றிக்கொண்டனர். இளைஞர்கள் செல்போன் தவிர வேறு உலகமே இல்லை என்பது போல் அவர்கள் எல்லா விஷயங்களுக்கும் செல்போன் ஒன்றே வாழ்கை என்று இருக்கின்றனர். பெண்களின் வேலைகளுக்கு நிரந்திர விடுமுறை கிடைத்தது தற்போது பெருகி வரும் தொழில்நுட்பவளர்ச்சியால். இதனால் அவர்களும் சீரியல், சினிமா, இணையதளம் என்று அவர்களின் வாழ்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய வளர்ச்சியால் நன்மைகள் ஏற்பட்டது உண்மைதான் என்றாலும் அதே நேரம் அனைவரின் உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. இதனால் பற்பல நோய்களும் அடி எடுத்து வைக்க ஆரம்பித்துள்ளது. முன்பெல்லாம் ஆண்கள் மற்றும் பெண்கள் வேலைசெய்து தங்கள் உடம்பை கட்டு கோப்பாக வைத்திருந்தனர். இப்போது உடம்பை குறைப்பதற்காக ஜிம் போன்ற செயற்கை சாதனங்களை உருவாக்கி அங்கு ஒரு மாஸ்டரின் வழிகாட்டுதலுடன் தங்களுடைய உடம்பை குறைக்க முற்படுகின்றனர்..

இந்த கானொலியில் இடம் பெற்ற ஒருவர் ஜிம் சென்று தன்னுடைய உடம்பை பராமரிப்பதுபோல் இருக்கிறார்.ஆனால் அவர் அவ்வாறு செல்லவில்லை எனவும் தானாகவே அமைந்தது என்றும் விளக்கியுள்ளார். அதற்கான காரணத்தை இந்த கானொலியில் கண்டு களிக்கலாம்.

You may have missed