திருமண மண்டபத்தையே அதிர வைத்த கேரள இளம் பெண்கள்.. செண்டை மேளத்தின் இசைக்கு போட்டி போட்டு போட்ட ஆட்டத்தை பாருங்க..!

mandapm_dance_nzz

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

கனரக வாகனங்களைக் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அந்தவரிசையில் இப்போது அழகிய இளம்பெண்கள் தொழில்முறையாக மிகவும் ரசனையோடு நடனம் ஆடி அசத்துகிறார்கள்.

பொதுவாகவே கேரளத்தின் செண்டை மேளத்துக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. செண்டை மேளம் ஊர்கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் போது அனைவருமே சொக்கிப் போவது உண்டு. கேரள பாரம்பர்யக் கலையான இதில் முதலில் ஆண்கள் மட்டுமே மேளம் இசைத்தும், ஆடியும் வந்தனர். ஆனால் இப்போது எல்லாம் பெண்கள் மட்டுமே பிரதானமாக இருக்கும் செண்டை மேளக் குழுக்கள் எல்லாம் வந்துவிட்டன. இப்போது, ஒரு செண்டை மேளக்குழுவில் இருக்கும் கேரளத்தின் அழகிய இளம் பெண்கள் இசைத்துக்கொண்டே நடனத்தில் பட்டையைக் கிளப்பும் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ அந்த வீடியோ…

You may have missed