என்னடா இது என்னையே சோதிக்கிறியா…. சேட்டை பிடித்த என்னிடமே சேட்டை பண்றியா.. கோபத்தில் பொங்கி எழுந்த குரங்கு செஞ்சதை பாருங்க..!

monkey_kandu_nz

குரங்குகள் தான் சேட்டை செய்யும் என்றில்லை…..இங்கே சில மனிதர்களும் குரங்குகளுக்கு இணையாக சேட்டை செய்வார்கள், ஏன் சில நேரம் குரங்குகளே தோற்றுவிடும். அவ்வாறு செய்வதனை தற்போது நாகரிக வார்த்தைகளை கொண்டு அலங்காரம் செய்கிறார்கள். பிராங்க் என்ற பெயரில் குரங்குகளையே மிஞ்சிவிடும் அளவிற்கு சேட்டைகள் செய்து நாகரிகம் அற்று நடப்பதும் உண்டு.

மனிதனுக்கு அடுத்தபடியாக புத்திசாலியுள்ள விலங்கான குரங்குகள் வீடியோ கேம் விளையாடுவது, ஸ்மார்ட் போன்களை கையாள்வது என மனிதர்களுக்கு இணையாக சில செயல்களின் மூலம் நிரூபித்துள்ளது குரங்குகள். அதிலும் சிம்பென்ஸி குரங்கு மிகவும் புத்திசாலியான குரங்கு என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். சிலவகையான குரங்குகள் பயிற்சியின் மூலம் மனிதர்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் என்றும் நிரூபித்துள்ளனர்.

குரங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வருகை தருவதும் உண்டு. அவைகள் எந்த தொந்தரவும் செய்யாமல் மனிதர்கள் வழங்கும் உணவுகளை சில நேரங்களில் உண்ணும்,இல்லையென்றால் அதை தவிர்க்கவும் செய்யும். இங்கே மிருக காட்சி சாலையில் கூண்டினில் அடைக்கப்பட்ட குரங்கிடம் ஒருவர் வாழை பழத்தினை கொடுத்து ஏமாற்றுகிறார். வாழை பழத்தை நீட்டுவதும்,பின்பு மாற்றி விடுவதும் என்று விளையாடிக்கொண்டிருக்கும் போது பொறுமை இழந்து கோபம் கொண்ட குரங்கு கையில் இருந்த வாழைப்பழத்தினை பிடுங்கி அதை உள்ளே இழுத்து கொண்டு பிய்த்து எறிந்தது. இதில் இருந்து அந்த குரங்கு எவ்வளவு கடுப்பாகி இருக்கும் என்பது புரியும். பொறுமை இழந்த குரங்கின் வீடியோ இங்கே கொடுக்கப்பட்டுள்ளது……

You may have missed