ஆங்கிலத்தில் புகுந்து விளையாடும் சிறுமி …. அழகு செல்லத்தின் மழலை மொழியில் வேற்று மொழியும் அழகுதான்…!
குழலினிது யாழினிது என்ப-தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர்.
திருக்குறளில் இடம்பெற்ற இந்த குறள் விளக்கும் பொருள்; குழலின் இசை, யாழின் இசை இனிமையாக இருப்பதாக கூறும் மனிதர்கள் தம் மக்களின் பொருளற்ற வகையில் பேசும் மழலையின் சொற்களை கேளாதவர்கள் என்று உரைக்கிறார். குழந்தைகள் மழலை மொழியில் பேசுவதும், பாடுவதும், கொஞ்சுவதும் அழகோ அழகு.
பள்ளிகளில் முதன் முதலாக சென்று பாடங்களை கற்று , கற்ற பாடல்களை நடன அசைவுகளுடன் கூறும் போது பெற்றோருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
2கே-கிட்ஸ் காலத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தங்கள் பெற்றோரை மம்மி, டாடி என்று அழைப்பது நாகரிகம் என்ற பெயரிலும், கல்வி கற்றவர்கள் சமுதாயம் என்கிற தோரணையிலும் எடுத்து கொள்ள பட்டது. ஆனால் பெற்றோரை குழந்தைகள் அம்மா, அப்பா என்று கூப்பிடும் போது வெளிப்படும் அன்பும், உரிமையும் வேறு மொழியில் உணர்வுபூர்வமாக வெளிப்படாது.
இங்கு ஒரு சிறுமி மழலை மொழியில் பேசும் போது தமிழோடு சேர்ந்த ஆங்கில சொற்கள் கேட்பவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். என்ன தான் நாம் ஆங்கிலம் கற்றாலும் முதலில் நம் நினைவுக்கு வருவது தமிழ் மட்டுமே. நம் சிந்தனைகள் நம் தாய்மொழியிலேயே சிந்தனை செய்வோம். அழகு குட்டி செல்லத்தின் மழலை பேச்சு இங்கே காணலாம்…
video : Thanthi TV