காகத்தை குழந்தை போல் பாசம் காட்டி வளர்க்கும் பெண்… அவரின் பேச்சை கேட்டு எப்படி நடக்குது பாருங்க..!

         பள்ளிக்கூடத்தில் 90ஸ் கிட்ஸ்கள் காலம் தொட்டே ஒரு கதை சொல்லப்படும். அது படக்கதையாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது. ஒரு காகத்தின் புத்திசாலித்தனத்தைக் காட்ட அந்த கதை வரும். அதாவது ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். காகத்துக்கு குடிப்பதற்கு அது எட்டாது. உடனே அக்கம், பக்கத்தில் இருக்கும் பொடி, பொடி கல்லாக தூக்கிவந்து பானையில் போடும். இதனால் தண்ணீர் மேலே வரும். அதன்பின்னர் காகம் தண்ணீரைக் குடிக்கும். இந்தக்கதை பள்ளிக்காலத்தில் செம பேமஸ் 

  காகத்தைப் பார்க்காதவர்கள் யாரும் இல்லை. இன்றும் சோறு சமைத்ததும் முன்னோர்களுக்கு படைப்பதாக நினைத்து காகத்திற்கு சோறு வைப்பவர்கள் பலர் உண்டு. ஆனாலும் நாய், பூனை போன்றவைதான் செல்லப் பிராணிகளாக இருக்கின்றன. காகம் யார் வீட்டிலும் வளர்க்கப்படுவதில்லை. ஆனால் கேரளத்தில் ஒரு பெண் தன் வீட்டில் செல்லமாக காகம் வளர்த்து வருகிறார். 

  அந்தக் காகத்திற்கு மணிகுட்டி என பெயர் வைத்திருக்கிறார். முத்தம் கொடு எனக் கேட்டால், அந்த காகம் செல்லமாக அந்தப் பெண்ணுக்கு முத்தம் கொடுக்கிறது. சோறும், மீனும் இந்த காகத்திற்கு கொள்ளை இஷ்டமாம். இதோ இந்த காகம், இந்தப் பெண்ணிடம் காட்ட்டும் இந்த பாசத்தை இதோ இந்த காணொலியில் பாருங்கள். 

You may have missed